இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

படம்
முகப்புத்தகத்தில் வந்தாய் - விண்ணப்பம் செய்தாய்.. மற்றோருக்கு முகம் திருப்பும் நான் - சத்தமின்றி உன் விண்ணப்பத்தை ஏற்றேன்.. அரட்டைக்கு வந்தாய், ஹாய் என்றாய் - யாருக்கும் பதில் அனுப்பாத நான் உனக்கு ஹலோ என்றேன்.. எடுத்த எடுப்பிலேயே டார்லிங் என்றாய் - வெறுப்பு வர வில்லை எனக்கு உன் மேல்.. வாடி போடி என யாருமே என்னை அழைக்காத வண்ணம் உரிமையுடன் அழைத்தாய் - வேண்டாம் என்று சொல்லத்தோனவில்லை எனக்கு.. உன்னை காதலிக்கிறேன் என்றாய் - வெட்கமின்றி சம்மதித்தேன்.. கண்ணழகு, குழலழகு, சிரிப்பழகு, செவி அழகு என்றாய் - பல்லை இளித்தேன் அட பல்வரிசை கூட என்னைப்போலவே என்றாய்.. சொல்ல வார்த்தை இல்லை - உறைந்து நின்றேன்.. அன்று தான் பெண்மை எய்தியது போல் உணர்ந்தேன் - வெட்கத்தில் உடம்பு கூசியது அது நம் முதல் சந்திப்பு... அருகில் வந்து "லட்டு" என்றாய் - அந்த வார்த்தையில் ஆதிகால பெண்ணாய் மாறினேன்... உன்னை பெயர் சொல்லி அழைக்கவும் என் நா கூசியது.. என் பெயரை சொல்லுடி என்றாய் - முடியாது என்றேன்.. அடியே கிறுக்கி என்றாய் - அது கூட பிடித்தது எனக்கு.. ஆசையாய் மாமா என்றேன் - அடி என் லட்டு என்றாய்.. நேரில் சந்திக்காமலே வளர

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?

படம்
1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐப்பசி மாதம் 5ம் திகதி உலகளாவிய ரீதியில் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, என் தாய் திருநாடான இலங்கையில் 6 ம் திகதி கொண்டாடுவது வழமை. மாணவர்களுக்காக தங்களது வாழ்வையே அர்ப்பணித்த உண்மையான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இப்போது நாம் எமது பதிவிற்கு செல்லலாம். தற்கால கட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் உண்மையாகவே கற்றுக்கொடுக்க தகுதியானவர்களா? ஆசிரியர்கள் என்று பாடசாலையில் இருக்கும் பொழுது நாம் எதற்கு எமது பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்புகின்றோம்? நாம் கல்வி கற்கும் கால கட்டத்தில் உயர் தரம் படிக்கும் போது மட்டுமே பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றோம் ஆனால் இக்காலத்தில், 01   ம் வகுப்பிலிருக்கும் குழந்தை கூட  பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்கிறதே? எமது ஆசிரியர்கள் பட்டதாரிகள், அதை விட அனுபவம் மிக்கவர்கள், ஆனால் இப்பொழுது இருக்கும் ஆசிரியர்கள்? அவர்கள் உண்மையாகவே பட்டதாரிகள் தானா? அனுபவம் மிக்கவர்களா? இவ்வாறான கேள்விகள் அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. இதைப்பற்றி விரிவாக சிந்திக்கும் போது, தற்போது அதிகமான ஆசி

இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்ல டா சாமி..

படம்
வை மீ லோர்ட்??? இந்த உலகத்துல தன்னோட வேலைய பார்க்காம அடுத்தவன் விஷயத்தில தலையிடும் புண்ணியவான்கள் நிறையவே இருக்காங்க. அது வெளியில மட்டுமில்லைங்க நம்ம வீட்ல கூட இருப்பாங்க. வெளில சொன்னாலும் சொல்லட்டியும் நம்ம எல்லாருக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் நிறையவே இருக்கும்.. அவங்க பாட்டுக்கு ஏதோ சொல்லி நம்மள குழப்பி விட்டுட்டு போயிருவாங்க ஆனா கடைசியா நம்ம தலை தான் டைம் போம் மாறி இப்போ வெடிக்குமோ அப்போ வேடிக்குமொனு ஆகிடும். என்ன கொடும சரவணன் இது.. இதோ சில நொந்து நூல் ஆகிய சந்தர்ப்பங்கள்.. நாம பாட்டுக்கு வீட்ட பூட்டிட்டு சிவனேன்னு வெளிய போய்கிட்டு இருப்போம், அப்ப வந்து கேப்பாங்க பாருங்க, புண்ணியவான் :  ஒழுங்கா வீட்ட பூட்டினியா??????? நாம : !@#$%^&* ஒரு தூரப்பயணம் புறப்பட்டு போகும் போது நாம நமக்கு தேவையான எல்லாத்தையும் கரெக்டா எடுத்து வச்சி தான் இருப்போம், ஆனா நம்மள வழி அனுப்ப வாரவங்க இருக்கங்களே, அதை எடுத்தியா இதை எடுத்தியான்னு கேட்டே நம்மள கன்பியுஸ் பண்ணிருவாங்க. எப்படியாவது கஷ்டப்பட்டு நாம ஒரு நல்ல தொழில் தேடி கடவுளேன்னு அதுக்கு போய்கிட்டு இருப்போம், ஆனா நம்ம புன்னியவான்ஸ் இருக்கங்கள

க்ரீஸ் மேன்... பீ கேர்புல்... (Grease Man - Be Careful)

படம்
இலங்கையில் தீவிரவாதிகளை பார்த்து பயந்ததை விட மக்கள் அதிகமாக பயப்படுவது இந்த கிரீஸ் மனிதர்களுக்கே.. அதென்னடா அது "கிரீஸ் மனிதன்" என்று முழிக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்காக இதோ கிரீஸ் மனிதன் பற்றி சிறியதொரு அறிமுகம்.. இலங்கையில் பல பிரதேசங்களில் இரவினில் உடம்பு முழுவதும் கிரீஸ் (Grease) பூசிக்கொண்டு தனிமையில் செல்லும் பெண்களை தாக்கும் இந்த கிரீஸ் மனிதன் பல வன்முறை சம்பவங்களுக்கு மூல கர்த்தாவாக திகழ்கிறான். பலர் பலவிதமாக கதைகள் கூறினாலும் கூட, உண்மையாகவே இந்த கிரீஸ் மனிதனால் பாதிக்க பட்ட பெண்கள் சிலர் உடல் பாகங்களை கூட இழந்தது மிக வருத்ததிட்குரியதாகும். எது எவ்வாறாயினும் இந்த கிரீஸ் மனிதர்களின் அட்டகாசத்தால் சில பல பெண்கள் வெளியில் செல்வதை கூட தவிர்த்தனர். ஒரு சில இடங்களில் தனி ஆளாகவும், இன்னும் சில இடங்களில் கூட்டமாகவும் உலா வரும் இந்த மர்ம மனிதர்கள் (இவர்களை மனிதர்கள் எனது கூறலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் எழுதுகிறேன் - யாரும் புண்ணியவான் இருப்பின் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்) அரசாங்கத்தின் உதவியுடன் இக்காரியத்தை செய்வதாக பல கதைகள் தோன்றி மறைகின்றன, சிலர் நம் ஜனாதிபதிக்க

படித்ததில் பிடித்தவை...

படம்
சின்ன நறுக்..... ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த துறவியும், அவரது சிஷ்யனும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போய் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் அடுத்த கரைய தாண்ட ஒரு உடைந்த பாலம் இருந்தது... "சரி வா போகலாம்.." இது குரு. "அங்க பாருங்க குருவே! யாரோ நடுவுல இருக்குற மாரி இருக்கே?" இது சிஷ்யன். குருவும் சிஷ்யன் கூறிய பக்கத்தை உற்று நோக்கினர். அப்பொழுது ஒரு அழகான பெண் அந்த பாலத்தின் நடுவில் இருந்த உடைசல்களில் மாட்டிக்கொண்டு போக முடியாமல் தவிப்பது அவர் பார்வையில் பட்டது. உடனே குரு அந்த இடத்துக்கு சென்று அந்த பெண்ணையும் தூக்கிக்கொண்டு தானும் பாலத்தை கடந்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனுக்கு ஒரே ஆச்சரியம், எங்கள் துறவற வாழ்க்கையில் பெண்களை சந்திப்பது, அவர்களை பார்ப்பது, அவர்களுடன் உரையாடுவது எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்ட பாவ செயல்களாகும், இவரோ அந்த பெண்ணை தொட்டு தூக்கி இருக்கிறாரே என சிந்தித்தான். அந்த குருவோ பாலத்தை கடந்ததும் அந்த பெண்ணை கீழே இறக்கி வைத்தவுடன், அந்த பெண் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றார். அதன் பின் குருவும் சிஷ்யனும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர

மனோ என்னும் காந்தக்குரலான்....

படம்
என்னைக் கவர்ந்த பிரபலங்கள் பார்ட் 2..... நாகூர் பாபு என்னும் இயற் பெயரைக் கொண்ட இவரை மனோ என்று பெயர் மாற்றம் செய்த பெருமை இசைஞானி இளையராஜாவே சேரும்.. 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ம் திகதி விஜயவாடாவில் பிறந்த மனோ பிறப்பிலே இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் ஆவார்.... ஆனால் இசைக்கு மொழி, மதம், இனம் என்னும் எல்லைகள் எல்லாம் இல்லை, உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களே அதற்கு சாட்சி.. தனது காந்தக்குரலின் மூலம் அனைவரையும் தன வாசம் இழுத்த இந்த மனோ என்னும் பாடகர், ஆரம்ப கால கட்டங்களில் M.S. விஸ்வநாதன் இசையமைப்பளருடன் 2 வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.. சென்பகமே சென்பகமே என்ற பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனத்திலும் நீங்க இடம் பிடித்த மனோ, பிரபல இசையமைப்பாளர்கள் அனைவருடனும் இணைந்து இணையற்ற இசை வெள்ளத்தில் ரசிகர்களை நனைய வைத்துள்ளார்.. அந்த வரிசையில் - வேலைக்காரன் திரைப்படத்திற்காக அவர் பாடிய வா வா வா என்ற பாடல் முதலிடத்தை பெறுகிறது. முக்காலா முக்கபலா, அழகிய லைலா, அடி அனார்கலி, எந்தன் வாழ்கையின் அர்த்தம், காதோரம் லோலாக்கு, மலையாளக் கரையோரம், நீ ஒரு காதல் சங்கீதம் போன்ற பல பிரபல பாடல்களை பாடி

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

படம்
மனோதத்துவம் பற்றிய சின்ன கருத்துரை.... ஒரு கூட்டுல 5 குரங்குகளை வைத்து அந்த கூட்டுல உச்சத்தில் ஒரு வாழப்பழத்தை கட்டி தொங்க விட்டு விட்டு அந்த வாழைப்பழத்தை எடுப்பதற்கு வசதியாக ஒரு ஏணியையும் வைத்து விடுக.. (இப்படி எல்லாம் சொல்றேண்டு செஞ்சிராதிங்கோ ஓகே) கொஞ்ச நேரத்தில் அந்த 5 ல ஒரு மங்கி ஐ மீன் குரங்கு (ஹி ஹி) அந்த வாழைப்பழத்துக்கு ரூட் விட்டு ஏணி மேல லைட்டா கைய வைக்கும், அப்போ நீங்க பண்ண வேண்டியதெல்லாம் வெடுக்கெண்டு ஐஸ் வாட்டர அந்த ஆல் மன்கீஸ் மேலயும் வீசணும்.. அதே மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மங்கி ட்ரை பண்ணும், அப்பவும் நீங்க அதே போல ஐஸ் வாட்டர எடுத்து வீசணும்.. அப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல 3 வது மங்கி ஏணி மேல கைய வைக்கும் போதே மத்த எல்லா மங்கியும் அதை தடுத்து நிறுத்தும்.. ஓகேயா!!!! இப்போ நாம பண்ண வேண்டியதெல்லாம் என்னன்னா அந்த 5 குரங்குல 1 குரங்க வெளிய எடுத்துட்டு புதுசா ஒரு குரங்க உள்ள போடனும்.. புதுசா வந்த ஆசாமிக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க அப்ப அவர் என்ன பண்ணுவார்???????? நைஸா வாழப்பழத்த எடுக்க ட்ரை பண்ணுவார் அப்ப உடனே நடக்கும் பாருங்க கச்சேரி, மத்த 4 குரங்கும் சேர்ந

படித்ததில் பிடித்தவை... (சின்ன கடி)

படம்
வந்ததும் வராததுமா ஊரார் எழுதுனத சுட்டு போடுறேனேனு என்ன பத்தி யாரும் தப்ப பீல் பண்ணாதிங்கப்பா... முதல் முதலா ஆரம்பிக்கிரோமே அடுத்தவங்க ஆக்கத்த உட்சாகப்படுதலாமேனு ஒரு நல்லெண்ணம் தான்.. ஹி ஹி ஹி வந்தவர்: உங்கப்பா என்ன பண்றார்? பையன்: தூங்கிட்டு இருக்கார் சார்! வந்தவர்: அவர் பேர் என்ன? பையன்: உ. சுப்பு சார் வந்தவர்: அவரைக் கொஞ்சம் உசுப்பு! இளைஞன்: தம்மாத்தூண்டு பையன் நீ... உன்னோட போட்டி போட்டா, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?  சிறுவன்: அதுவா....? 'உ'-வும் 'எ'-வும்தான் வித்தியாசம்!!!! கருப்பையா: வயலுக்குள்ள என்ன சண்டை அவங்க ரெண்டு பேருக்கும்? ஒருத்தர் வாயைப் பேத்துடுவேன்கிறார்... இன்னொருத்தர் காலை ஒடச்சிடுவேன்கிறார்.....! சுப்பையா: ஒண்ணுமில்லங்க... 'வாய்க்-கால்' சண்டைதான்! "உங்க கடையில மருந்து வாங்கிச் சாப்பிட்டவங்க திரும்பி வர மாட்டாங்களா... ஏன்?" "அந்த மருந்திலேயே அவங்க போய்ச் சேர்ந்திடுவாங்களே..!" மந்திரி: மன்னா.... போர் நடக்கும் என்று நினைத்து தோண்டிய பதுங்கு குழிகளை என்ன செய்வது? அதான் போர் நடக்கவில்லையே!  மன்னா: ப'தூங்க