செவ்வாய், 13 செப்டம்பர், 2011

மனோ என்னும் காந்தக்குரலான்....

என்னைக் கவர்ந்த பிரபலங்கள் பார்ட் 2.....நாகூர் பாபு என்னும் இயற் பெயரைக் கொண்ட இவரை மனோ என்று பெயர் மாற்றம் செய்த பெருமை இசைஞானி இளையராஜாவே சேரும்..

1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ம் திகதி விஜயவாடாவில் பிறந்த மனோ பிறப்பிலே இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் ஆவார்.... ஆனால் இசைக்கு மொழி, மதம், இனம் என்னும் எல்லைகள் எல்லாம் இல்லை, உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களே அதற்கு சாட்சி..

தனது காந்தக்குரலின் மூலம் அனைவரையும் தன வாசம் இழுத்த இந்த மனோ என்னும் பாடகர், ஆரம்ப கால கட்டங்களில் M.S. விஸ்வநாதன் இசையமைப்பளருடன் 2 வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.. சென்பகமே சென்பகமே என்ற பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனத்திலும் நீங்க இடம் பிடித்த மனோ, பிரபல இசையமைப்பாளர்கள் அனைவருடனும் இணைந்து இணையற்ற இசை வெள்ளத்தில் ரசிகர்களை நனைய வைத்துள்ளார்..

அந்த வரிசையில் - வேலைக்காரன் திரைப்படத்திற்காக அவர் பாடிய வா வா வா என்ற பாடல் முதலிடத்தை பெறுகிறது. முக்காலா முக்கபலா, அழகிய லைலா, அடி அனார்கலி, எந்தன் வாழ்கையின் அர்த்தம், காதோரம் லோலாக்கு, மலையாளக் கரையோரம், நீ ஒரு காதல் சங்கீதம் போன்ற பல பிரபல பாடல்களை பாடி உள்ளார்.. குரலிலே காந்தத்தை வைத்துள்ள மனோ இப்பொழுதும் கூட பாடல்களை பாடிய வண்ணம் தனது கலை பணியை தொடர்கிறார்..

அவரது பணி மென்மேலும் வளர உளமார வாழ்த்துகிறேன்... 

மனோவின் பாடல்களை கேட்டு ரசிக்க,

4 கருத்துகள்:

  1. அவரது பணி மென்மேலும் வளர உளமார வாழ்த்துகிறேன்... இவரது பாடலை கேட்கும் போது அடுத்த ஜென்மத்திலாவது நானும் நல்ல இசை தெரிந்த பாடகராக பிறக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் அடுத்த ஜென்மத்தில் அல்ல இந்த ஜென்மத்திலேயே நல்ல ஒரு பாடகராக வர நான் வாழ்த்துகின்றேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மீண்டும் வருக..

    பதிலளிநீக்கு