இடுகைகள்

தடங்கலுக்கு வருந்துகிறேன்...

தாய்மையின் பூரிப்பில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருப்பதால் வலைப்பதிவில் பதிவு எதுவும் எழுத முடியவில்லை. அன்பு நண்பர்களின் பதிவுகளில் கருத்திடவும் முடியவில்லை. அன்பு உள்ளங்கள் நண்பர்கள் அனைவரிடமும் மன்னிக்கும் படி வேண்டிக்கொள்கின்றேன்.. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றிகள்..
அன்புடன், வினோதினி..

ரசித்ததும், எழுதியதும்..

காத்திரு என்று கனவில் கூறினாய்..
நினைவில் அதை கூறி இருந்தால்..
காத்திருந்திருப்பேன் ஆயுள் முடியும் வரை..


உன் நாமத்தை பேனா முனை கொண்டு செதுக்கி,
உன் உருவத்தை விழிகளால் வீடியோ பண்ணி,
உள்ளத்திரையில் கலர் கனவுகளாக,
மீண்டும் மீண்டும் மீட்டுக்கொண்டிருக்கிறேன்,
நடு நிசியில்....


இருளாய் கிடந்த என் இதயத்துள்,
காதல் தீபத்துடன் குடியேறிய காதலனே,
என் நெஞ்சை கொழுத்தி விட்டு போவாய் என,
நான் கனவிலும் கருதவில்லை...


நீ இருந்த என் இதயத்தில்,
இன்னொருத்தனுக்கு இடம் இல்லை,
என் மணவறையில் மகரந்த மணம் வீசும் - உன்
நினைவுகளை அணைத்த படியே,
என் ஆயுள் கழிகிறது...


மெய் மறந்து நின்றேன் - உனை பார்த்த அன்று
கண் கலங்கி நிற்கின்றேன் - உனக்காக இன்று


கனமான காதலை சொல்ல வரும் போது !
எப்போதும் எனக்கு பேச்சற்று போகிறது !
நீயோ உன்னில் ஊரும் அன்பை -
உருக்கமாக சொல்கிறாய் !
என் இதய அறையில் அக்குரல்கள் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன !
நானோ - மௌனமாக காதலை வெளிப்படுத்துகின்றேன் !
நீயோ - நான் வெறுக்கிறேன் என்று கலக்கம் அடைகிறாய் !
எப்படியாவது நானும் உன்னை காதலிப்பதை புரிந்து கொள் !


தூக்கத்தில் கனா வந்தது, கூடவே கவிதையும் வந்தது..

உடைந்த கனவுகள் - உள்ளக்குமுறல்

படம்
உன்னை மறக்க முடியாமல் துடிக்கிறேனடி,
என் உயிரில் கலந்து, பின்பு என்னை விட்டு பிரிந்து, என்னை ஒரு ஜடமாய் விட்டாயே என் அன்பே.

நாம் கண்ட கனவுகள், நம்முள் இருந்த ஏக்கங்கள், எல்லாம் ஒரு கண்ணாடி குவளை போல் உடைந்து போனதடி.
உன்னை கட்டியணைக்கவும் எனக்கு கூடவில்லை, உன்னை முத்தமிடவும் எனக்கு கிட்டவில்லை, உன் கண்ணில் வழியும் கண்ணீர் துடைக்கவும் முடியவில்லை.
உன் நெற்றியில் நான் முத்தம் இட வேண்டும் உன் மார்பில் நான் சாய வேண்டும், என் மடியில் நீ தூங்க வேண்டும், உனக்கு தாலாட்டு நான் பாட வேண்டும்.
உன்னை செல்லமாய் நான் திட்ட வேண்டும், நீ விளையாட்டாய் கோவப்பட வேண்டும், என் நெஞ்சில் சாய்ந்து பல கதைகள் நீ பேச வேண்டும்.
ஆனால் பெண்ணே நீ என்னை விட்டு சென்ற பின்னே எல்லாம் ஒரு கனவாய் போனதடி என் உயிர் நிலை குலைந்து, என் திசை தடம் புரண்டு,
என் நா வரண்டு, நீ பிரிந்தது ஒரு கனாவாய் இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி, உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேனடி...

தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

படம்
முகப்புத்தகத்தில் வந்தாய் - விண்ணப்பம் செய்தாய்.. மற்றோருக்கு முகம் திருப்பும் நான் - சத்தமின்றி உன் விண்ணப்பத்தை ஏற்றேன்.. அரட்டைக்கு வந்தாய், ஹாய் என்றாய் - யாருக்கும் பதில் அனுப்பாத நான் உனக்கு ஹலோ என்றேன்.. எடுத்த எடுப்பிலேயே டார்லிங் என்றாய் - வெறுப்பு வர வில்லை எனக்கு உன் மேல்.. வாடி போடி என யாருமே என்னை அழைக்காத வண்ணம் உரிமையுடன் அழைத்தாய் - வேண்டாம் என்று சொல்லத்தோனவில்லை எனக்கு.. உன்னை காதலிக்கிறேன் என்றாய் - வெட்கமின்றி சம்மதித்தேன்.. கண்ணழகு, குழலழகு, சிரிப்பழகு, செவி அழகு என்றாய் - பல்லை இளித்தேன் அட பல்வரிசை கூட என்னைப்போலவே என்றாய்.. சொல்ல வார்த்தை இல்லை - உறைந்து நின்றேன்.. அன்று தான் பெண்மை எய்தியது போல் உணர்ந்தேன் - வெட்கத்தில் உடம்பு கூசியது அது நம் முதல் சந்திப்பு... அருகில் வந்து "லட்டு" என்றாய் - அந்த வார்த்தையில் ஆதிகால பெண்ணாய் மாறினேன்... உன்னை பெயர் சொல்லி அழைக்கவும் என் நா கூசியது.. என் பெயரை சொல்லுடி என்றாய் - முடியாது என்றேன்.. அடியே கிறுக்கி என்றாய் - அது கூட பிடித்தது எனக்கு.. ஆசையாய் மாமா என்றேன் - அடி என் லட்டு என்றாய்.. நேரில் சந்திக்காமலே வளர்ந்தது நம் உறவ…

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?

படம்
1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐப்பசி மாதம் 5ம் திகதி உலகளாவிய ரீதியில் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, என் தாய் திருநாடான இலங்கையில் 6 ம் திகதி கொண்டாடுவது வழமை. மாணவர்களுக்காக தங்களது வாழ்வையே அர்ப்பணித்த உண்மையான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இப்போது நாம் எமது பதிவிற்கு செல்லலாம்.

தற்கால கட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் உண்மையாகவே கற்றுக்கொடுக்க தகுதியானவர்களா?

ஆசிரியர்கள் என்று பாடசாலையில் இருக்கும் பொழுது நாம் எதற்கு எமது பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்புகின்றோம்?


நாம் கல்வி கற்கும் கால கட்டத்தில் உயர் தரம் படிக்கும் போது மட்டுமே பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றோம் ஆனால் இக்காலத்தில், 01ம் வகுப்பிலிருக்கும் குழந்தை கூட பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்கிறதே?

எமது ஆசிரியர்கள் பட்டதாரிகள், அதை விட அனுபவம் மிக்கவர்கள், ஆனால் இப்பொழுது இருக்கும் ஆசிரியர்கள்? அவர்கள் உண்மையாகவே பட்டதாரிகள் தானா? அனுபவம் மிக்கவர்களா?

இவ்வாறான கேள்விகள் அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. இதைப்பற்றி விரிவாக சிந்திக்கும் போது, தற்போது அதிகமான ஆசிரியர்கள் ஏதோ போக…

இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்ல டா சாமி..

படம்
இந்த உலகத்துல தன்னோட வேலைய பார்க்காம அடுத்தவன் விஷயத்தில தலையிடும் புண்ணியவான்கள் நிறையவே இருக்காங்க. அது வெளியில மட்டுமில்லைங்க நம்ம வீட்ல கூட இருப்பாங்க. வெளில சொன்னாலும் சொல்லட்டியும் நம்ம எல்லாருக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் நிறையவே இருக்கும்.. அவங்க பாட்டுக்கு ஏதோ சொல்லி நம்மள குழப்பி விட்டுட்டு போயிருவாங்க ஆனா கடைசியா நம்ம தலை தான் டைம் போம் மாறி இப்போ வெடிக்குமோ அப்போ வேடிக்குமொனு ஆகிடும். என்ன கொடும சரவணன் இது..


இதோ சில நொந்து நூல் ஆகிய சந்தர்ப்பங்கள்..
நாம பாட்டுக்கு வீட்ட பூட்டிட்டு சிவனேன்னு வெளிய போய்கிட்டு இருப்போம், அப்ப வந்து கேப்பாங்க பாருங்க, புண்ணியவான் :  ஒழுங்கா வீட்ட பூட்டினியா??????? நாம : !@#$%^&*
ஒரு தூரப்பயணம் புறப்பட்டு போகும் போது நாம நமக்கு தேவையான எல்லாத்தையும் கரெக்டா எடுத்து வச்சி தான் இருப்போம், ஆனா நம்மள வழி அனுப்ப வாரவங்க இருக்கங்களே, அதை எடுத்தியா இதை எடுத்தியான்னு கேட்டே நம்மள கன்பியுஸ் பண்ணிருவாங்க.
எப்படியாவது கஷ்டப்பட்டு நாம ஒரு நல்ல தொழில் தேடி கடவுளேன்னு அதுக்கு போய்கிட்டு இருப்போம், ஆனா நம்ம புன்னியவான்ஸ் இருக்கங்களே, அங்க நல்ல வேல இருக்கு இங்க …

க்ரீஸ் மேன்... பீ கேர்புல்... (Grease Man - Be Careful)

படம்
இலங்கையில் தீவிரவாதிகளை பார்த்து பயந்ததை விட மக்கள் அதிகமாக பயப்படுவது இந்த கிரீஸ் மனிதர்களுக்கே..
அதென்னடா அது "கிரீஸ் மனிதன்" என்று முழிக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்காக இதோ கிரீஸ் மனிதன் பற்றி சிறியதொரு அறிமுகம்..
இலங்கையில் பல பிரதேசங்களில் இரவினில் உடம்பு முழுவதும் கிரீஸ் (Grease) பூசிக்கொண்டு தனிமையில் செல்லும் பெண்களை தாக்கும் இந்த கிரீஸ் மனிதன் பல வன்முறை சம்பவங்களுக்கு மூல கர்த்தாவாக திகழ்கிறான். பலர் பலவிதமாக கதைகள் கூறினாலும் கூட, உண்மையாகவே இந்த கிரீஸ் மனிதனால் பாதிக்க பட்ட பெண்கள் சிலர் உடல் பாகங்களை கூட இழந்தது மிக வருத்ததிட்குரியதாகும். எது எவ்வாறாயினும் இந்த கிரீஸ் மனிதர்களின் அட்டகாசத்தால் சில பல பெண்கள் வெளியில் செல்வதை கூட தவிர்த்தனர். ஒரு சில இடங்களில் தனி ஆளாகவும், இன்னும் சில இடங்களில் கூட்டமாகவும் உலா வரும் இந்த மர்ம மனிதர்கள் (இவர்களை மனிதர்கள் எனது கூறலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் எழுதுகிறேன் - யாரும் புண்ணியவான் இருப்பின் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்) அரசாங்கத்தின் உதவியுடன் இக்காரியத்தை செய்வதாக பல கதைகள் தோன்றி மறைகின்றன, சிலர் நம் ஜனாதிபதிக்கு ஏ…