உடைந்த கனவுகள் - உள்ளக்குமுறல்


உன்னை மறக்க முடியாமல் துடிக்கிறேனடி,
என் உயிரில் கலந்து,
பின்பு என்னை விட்டு பிரிந்து,
என்னை ஒரு ஜடமாய் விட்டாயே என் அன்பே.


நாம் கண்ட கனவுகள்,
நம்முள் இருந்த ஏக்கங்கள்,
எல்லாம் ஒரு கண்ணாடி குவளை போல்
உடைந்து போனதடி.

உன்னை கட்டியணைக்கவும் எனக்கு கூடவில்லை,
உன்னை முத்தமிடவும் எனக்கு கிட்டவில்லை,
உன் கண்ணில் வழியும் கண்ணீர்
துடைக்கவும் முடியவில்லை.

உன் நெற்றியில் நான் முத்தம் இட வேண்டும்
உன் மார்பில் நான் சாய வேண்டும்,
என் மடியில் நீ தூங்க வேண்டும்,
உனக்கு தாலாட்டு நான் பாட வேண்டும்.

உன்னை செல்லமாய் நான் திட்ட வேண்டும்,
நீ விளையாட்டாய் கோவப்பட வேண்டும்,
என் நெஞ்சில் சாய்ந்து பல கதைகள்
நீ பேச வேண்டும்.

ஆனால் பெண்ணே நீ என்னை விட்டு
சென்ற பின்னே எல்லாம் ஒரு கனவாய் போனதடி
என் உயிர் நிலை குலைந்து,
என் திசை தடம் புரண்டு,

என் நா வரண்டு,
நீ பிரிந்தது ஒரு கனாவாய்
இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி,
உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேனடி...


கருத்துகள்

 1. ஆகா ...கண்ணாடியில் கல்ல உட்டுடாங்களே...

  ஒக்கே ஒக்கே....

  படைப்பாளிக்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 2. 6 மாதங்களுக்கு பின் கனவுகள் உடைந்து உள்ள குமுறலுடன்...

  பதிலளிநீக்கு
 3. மனசாட்சி™ சொன்னது…
  ஆகா ...கண்ணாடியில் கல்ல உட்டுடாங்களே...

  ஒக்கே ஒக்கே....

  படைப்பாளிக்கு பாராட்டுக்கள்
  6 மாதங்களுக்கு பின் கனவுகள் உடைந்து உள்ள குமுறலுடன்...//////

  மிக்க நன்றி நண்பரே, கடந்த பதிவிற்கு தொடர் பதிவாக தான் இதை பிரசுரித்தேன், இது அந்த ஆணின் உள்ளக்குமுறல்..

  பதிலளிநீக்கு
 4. //நீ பிரிந்தது ஒரு கனாவாய்
  இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி//

  பிரிவின் கொடிய வேதனையை இன்றும் நான் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.பிரியமானவர்களுக்கிடையில் பிரிவு என்றுமே கொடுமை.

  பதிலளிநீக்கு
 5. Arun Kumar சொன்னது…
  welcome back :)
  nice post

  Thank you very much.. :)

  பதிலளிநீக்கு
 6. சித்தாரா மகேஷ். சொன்னது…
  //நீ பிரிந்தது ஒரு கனாவாய்
  இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி//

  பிரிவின் கொடிய வேதனையை இன்றும் நான் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.பிரியமானவர்களுக்கிடையில் பிரிவு என்றுமே கொடுமை.//////

  ஆம் பிரிவின் கொடுமையை வரைவிலக்கணப்படுத்த வார்த்தைகளால் முடியாது.. அதை உணர்பவருக்கே வேதனையும் வலியும் புரியும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 7. புதுத்தமிழ் ப.லோகேசு சொன்னது…
  very nice to feel in man to women

  thank you friend..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தடங்கலுக்கு வருந்துகிறேன்...

ரசித்ததும், எழுதியதும்..

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?