தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

முகப்புத்தகத்தில் வந்தாய் - விண்ணப்பம் செய்தாய்..
மற்றோருக்கு முகம் திருப்பும் நான் - சத்தமின்றி உன் விண்ணப்பத்தை ஏற்றேன்..
அரட்டைக்கு வந்தாய், ஹாய் என்றாய் - யாருக்கும் பதில் அனுப்பாத நான் உனக்கு ஹலோ என்றேன்..
எடுத்த எடுப்பிலேயே டார்லிங் என்றாய் - வெறுப்பு வர வில்லை எனக்கு உன் மேல்..
வாடி போடி என யாருமே என்னை அழைக்காத வண்ணம் உரிமையுடன் அழைத்தாய் - வேண்டாம் என்று சொல்லத்தோனவில்லை எனக்கு..
உன்னை காதலிக்கிறேன் என்றாய் - வெட்கமின்றி சம்மதித்தேன்..
கண்ணழகு, குழலழகு, சிரிப்பழகு, செவி அழகு என்றாய் - பல்லை இளித்தேன்
அட பல்வரிசை கூட என்னைப்போலவே என்றாய்..
சொல்ல வார்த்தை இல்லை - உறைந்து நின்றேன்..
அன்று தான் பெண்மை எய்தியது போல் உணர்ந்தேன் - வெட்கத்தில் உடம்பு கூசியது அது நம் முதல் சந்திப்பு...
அருகில் வந்து "லட்டு" என்றாய் - அந்த வார்த்தையில் ஆதிகால பெண்ணாய் மாறினேன்...
உன்னை பெயர் சொல்லி அழைக்கவும் என் நா கூசியது..
என் பெயரை சொல்லுடி என்றாய் - முடியாது என்றேன்..
அடியே கிறுக்கி என்றாய் - அது கூட பிடித்தது எனக்கு..
ஆசையாய் மாமா என்றேன் - அடி என் லட்டு என்றாய்..
நேரில் சந்திக்காமலே வளர்ந்தது நம் உறவு - முன் ஜென்ம பந்தம் என்றாய்..
உனக்காகவே பிறந்தேன் என்றாய் - பின் ஜென்மத்திலும் நீயே என் லட்டு என்றாய்..
நாட்களும் நகர்ந்தது - காதலும் வலுத்தது..
திடீரென ஓர் நாள் என் கண்முன்னே தோன்றி இன்ப அதிர்ச்சி தந்தாய் - அது நம் இரண்டாம் சந்திப்பு..
"ஏன் மாமா இவ்வளவு தூரம்" என்றேன் - அவசரப்பட்டு என் லட்டை திட்டினேனே மன்னிப்பு கேட்க ஓடி வந்தேன் என்றாய்..
மாமா என்று கண் கலங்கினேன் - லட்டு என்று நெற்றியில் முத்தமிட்டாய்..
வாடி காலார நடக்கலாம் என்றாய் - வேலையையும் மறந்து உன் பின் நாய் குட்டி போல் வந்தேன்..
வழியில் உன் அம்மா.............................................................................................
பயமின்றி என் தோளில் கை போட்டு இவள் தான் என் வருங்கால மனைவி என்றாய் - உன் தாய்க்கும் அதிர்ச்சி எனக்கு அதை விட...
மிகவும் பிடித்தது உன் தைரியம் - என் இதயத்தில் உச்சத்திற்கே சென்றாய்..
உன் தைரியத்தை மெச்சினேன் - அன்பு கூடியது காதல் வலுத்தது..
வாரம் ஒன்று கழிந்திருக்க - சிறுக சிறுக உணர்ந்தேன் உன் மாற்றத்தை..
வீட்டில் பிரச்சினை என்றாய் - வாழ்கை வெறுக்குது என்றாய்..
என்ன மாமா எனக்காக தானே என அழுதேன் நான் - என் உடலில் உயிர் உள்ள வரை உன் கண்களில் நீர் வர அனுமதிக்க மாட்டேன் என்றாய்..
நீ என்னுடன் இருந்தால் காலம் முழுவதும் உன் வாழ்வு - கண்ணீரில் கரையும் என்றாய்..
என்னுள் பூகம்பம் வெடித்தது - என் உயிர் சரிய ஆரம்பித்தது..
எப்பொழுதும் போல் மௌனமாக நீ சொன்னதற்கு செவி மடுத்தேன் - நீயே பேசினாய் நான் மௌனமாக கரைய ஆரம்பித்தேன்...
இது நடக்காது என்றாய் - என் உயிர் ஊசல் ஆடியது..
என்னை மறந்திடு என்றாய் - அதற்கு மட்டும் வாய் திறந்தேன் உங்கள் விருப்பம் மாமா என்று.....
நீ சந்தோஷமாய் இருக்கனும் என்றாய் - நீங்கள் இல்லாமல் எப்படி என்றேன்..
இருக்கணும்டி என ஆணையிட்டாய் - ஆமென்று தலை வணங்கினேன்..
தொலைபேசியை துண்டித்தாய் - என் சந்தோஷம் வேரோடு அறுந்தது..
உன் குரலின் அசரீரி இன்றும் கேட்கிறது............
உனக்கும் தெரியாமல் - உலகுக்கும் தெரியாமல்
இன்றும் நனைகிறது என் தலையணை - நீ விரும்பாத என் கண்ணீரில்..
மன்னித்து விடு மாமா உன் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை....
தினம் அழுது தீர்த்தும் வற்றியபாடில்லை என் கண்ணீர்...

கருத்துகள்

 1. பல பேஸ்புக்காதல்களின் இன்றைய நிலை இதுதான்

  பதிலளிநீக்கு
 2. உங்கள் பதிவு ஒரு நல்ல கருத்தை தாங்கி நிற்கின்றது வாழ்த்துக்கள்..ஆமா இது உண்மை கதையா?

  உங்கள் பதிவுகளை தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ்10,போன்ற திரட்டிகளில் இணைக்கலாமே இதனால் உங்கள் பதிவுகள் பலரைச்சென்று அடையும் நிறைய வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வருவார்கள்.திரட்டிகளில் இணைப்பது பற்றி ஏதும் ஆலோசனை தேவை என்றால் கேளுங்கள் சொல்கின்றேன்.

  அப்பறம் நீங்கள் படிக்கும் ஏனைய பதிவர்களின் பதிவுகளுக்கு கமண்ட் போட்டால் தான் உங்களுக்கும் அவர்கள் கமண்ட் போடுவார்கள் இதுதான் இன்றைய பதிவுலக அரசியல்,ஒரு 10,20,30 பதிவர்களின் தளத்தில் கமண்ட் போட்டுப்பாருங்கள் அவர்களின் தளத்தை பின் தொடர்ந்து பாருங்கள்..உங்கள் தளத்திற்கு கமண்டும்,பின் தொடர்பவர்களும் அதிகரிப்பார்கள்.உங்கள் எழுத்துக்கள் ரசிக்கும் படி இருக்கின்றது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வார்ததைகளை ஒழுங்காக அடிக்குயருந்தால் இன்னும் சூப்பர் ராக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. அருமையாக இருந்தது நன்பியே...

  ஆமா.... அந்த மாமா.. நல்லவரா கெட்டவரா???

  பதிலளிநீக்கு
 5. உயிரை உருக்கும் கதை போல நகர்கிறது கவிதை, அருமை அருமை...பிரிவின் துயரம் சொன்ன விதம் மனதில் வலி தோன்றுகிறது...

  பதிலளிநீக்கு
 6. K.s.s.Rajh சொன்னது…
  பல பேஸ்புக்காதல்களின் இன்றைய நிலை இதுதான்//////

  ஆம் உங்கள் கருத்து மெய்யானது..

  பதிலளிநீக்கு
 7. K.s.s.Rajh சொன்னது…
  உங்கள் பதிவு ஒரு நல்ல கருத்தை தாங்கி நிற்கின்றது வாழ்த்துக்கள்..ஆமா இது உண்மை கதையா?

  உங்கள் பதிவுகளை தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ்10,போன்ற திரட்டிகளில் இணைக்கலாமே இதனால் உங்கள் பதிவுகள் பலரைச்சென்று அடையும் நிறைய வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வருவார்கள்.திரட்டிகளில் இணைப்பது பற்றி ஏதும் ஆலோசனை தேவை என்றால் கேளுங்கள் சொல்கின்றேன்.

  அப்பறம் நீங்கள் படிக்கும் ஏனைய பதிவர்களின் பதிவுகளுக்கு கமண்ட் போட்டால் தான் உங்களுக்கும் அவர்கள் கமண்ட் போடுவார்கள் இதுதான் இன்றைய பதிவுலக அரசியல்,ஒரு 10,20,30 பதிவர்களின் தளத்தில் கமண்ட் போட்டுப்பாருங்கள் அவர்களின் தளத்தை பின் தொடர்ந்து பாருங்கள்..உங்கள் தளத்திற்கு கமண்டும்,பின் தொடர்பவர்களும் அதிகரிப்பார்கள்.உங்கள் எழுத்துக்கள் ரசிக்கும் படி இருக்கின்றது வாழ்த்துக்கள்/////

  மிக்க நன்றி K.s.s.Rajh அவர்களே, ஆம் இது 2010 ம ஆண்டு நடந்த உண்மை சம்பவம் ஒன்று..

  உங்கள் கருத்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி, ஆம் நீங்கள் சொல்வது போலவே செய்கின்றேன், தமிழ்மணத்தில் இணைந்தாயிற்று 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. !* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
  வார்ததைகளை ஒழுங்காக அடிக்குயருந்தால் இன்னும் சூப்பர் ராக இருக்கும்.//////

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, எதிர்வரும் பதிவுகளில் திருத்திக்கொள்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 9. Mohamed Faaique சொன்னது…
  அருமையாக இருந்தது நன்பியே...

  ஆமா.... அந்த மாமா.. நல்லவரா கெட்டவரா???///////

  மிக்க நன்றி தோழரே, அந்த மாமா ரொம்ப நல்லவர், லட்டுவிற்கு...

  பதிலளிநீக்கு
 10. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  உயிரை உருக்கும் கதை போல நகர்கிறது கவிதை, அருமை அருமை...பிரிவின் துயரம் சொன்ன விதம் மனதில் வலி தோன்றுகிறது/////////

  உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, இது 2010 ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம். பாதிக்கப்பட்ட நிலையில் இன்னும் அந்த பெண்..

  பதிலளிநீக்கு
 11. ம் ரொம்ப சோகம் அதிகமாக இருக்கிறது. அந்த பாதிக்க பட்ட பெண்ணுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். காதல்கள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தோன்றலாம், அது பேஸ் புக் ஆகவும் இருக்கலாம். ஆனால் இழப்பு எல்லா நேரத்திலும் ஒன்று தான் :(

  பதிலளிநீக்கு
 12. ஒவ்வொரு வரியிலும் இளமையின் துள்ளலும் எதிர் பார்ப்பும் தெரிகிறது... அருமை சகோதரி..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

  பதிலளிநீக்கு
 13. ஆண்களையும் அவர்களது பொய் வார்த்தைகளையும் நம்பி ஏமாந்த பெண்கள் ஏராளம்.ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.பிரிவுகள் என்பது நிரந்தரமில்லை.எல்லாம் நன்மைக்குத்தான் தோழி.

  பதிலளிநீக்கு
 14. சோகங்களை நினைத்து எத்தனை நாள் தான் கவிதை சொல்வது. 2010க்கும் 2011 இடையே ஏற்கனவே பல நாட்களை தாண்டி விட்டோம். யாருக்குதான் தோல்வி இல்லை. எனக்கும் கூட சில வருடம் முன்னரும் இதே கதை தான்.
  ஏதோ ஒரு நாள் ஒரு நிமிடம் தோன்றும். அப்படியே எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கி கடாசி விட்டு போக வேண்டியது தான்.

  ரிவர்ஸ் மிரர் தேவைதான். ஆனா ரிவ்ர்ஸ் பார்த்துகிட்டே இருந்தா முன்னால இடிக்கும்.சொன்னது ஏதோ பெயர் தெரியாத தத்துவ அறிஞர் :)

  பதிலளிநீக்கு
 15. Arun Kumar சொன்னது…
  ம் ரொம்ப சோகம் அதிகமாக இருக்கிறது. அந்த பாதிக்க பட்ட பெண்ணுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். காதல்கள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தோன்றலாம், அது பேஸ் புக் ஆகவும் இருக்கலாம். ஆனால் இழப்பு எல்லா நேரத்திலும் ஒன்று தான் :(///////////

  உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பரே, உண்மையான கருது, இழப்பு எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் ஒன்று தான்..

  பதிலளிநீக்கு
 16. ஒவ்வொரு வரியிலும் இளமையின் துள்ளலும் எதிர் பார்ப்பும் தெரிகிறது... அருமை சகோதரி..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா////////////

  மிக்க நன்றி சகோதரரே...

  பதிலளிநீக்கு
 17. சித்தாரா மகேஷ். சொன்னது…
  ஆண்களையும் அவர்களது பொய் வார்த்தைகளையும் நம்பி ஏமாந்த பெண்கள் ஏராளம்.ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.பிரிவுகள் என்பது நிரந்தரமில்லை.எல்லாம் நன்மைக்குத்தான் தோழி.//////////

  ஆம் தோழி உங்கள் கருத்து சரியானது, இந்த காதல் வந்து தாக்கும் பொழுது, அவர்களின் குறைகள் கூட நிறைகளாகவே தோன்றுகின்றன. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். மீண்டும் வருக.. :)

  பதிலளிநீக்கு
 18. Arun Kumar சொன்னது…
  சோகங்களை நினைத்து எத்தனை நாள் தான் கவிதை சொல்வது. 2010க்கும் 2011 இடையே ஏற்கனவே பல நாட்களை தாண்டி விட்டோம். யாருக்குதான் தோல்வி இல்லை. எனக்கும் கூட சில வருடம் முன்னரும் இதே கதை தான்.
  ஏதோ ஒரு நாள் ஒரு நிமிடம் தோன்றும். அப்படியே எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கி கடாசி விட்டு போக வேண்டியது தான்.

  ரிவர்ஸ் மிரர் தேவைதான். ஆனா ரிவ்ர்ஸ் பார்த்துகிட்டே இருந்தா முன்னால இடிக்கும்.சொன்னது ஏதோ பெயர் தெரியாத தத்துவ அறிஞர் :)///////


  ஆம் வாழ்கையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க நாங்களும் ஓடுகின்றோம் இருப்பினும், ஒரு சில நபர்களை/ அனுபவங்களை சந்திக்கும் பொழுது, எப்போதோ நடந்த சம்பவங்கள் மீண்டும் மனக்கண் முன் வந்து பழையதை கிளறி விடுகின்றன. இருந்தாலும் அனைத்தும் சுகமான வலிகள் தரும் அனுபவங்களே..

  பதிலளிநீக்கு
 19. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 20. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 21. இக்கதையின் நாயகி மிகவும் பலகீனமாக இருக்கின்றாள்.. முகம் தெரியாத ஒருவன் பேசிய அனைத்து பேச்சுக்கும் ஒரு இடத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இடம் கொடுத்திருக்கிறாள்... நல்ல வேளை அவள் சீரழித்தது போல் சம்பவம் அமையாதது போல் அமைந்திருக்கிறது பதிவு... அந்த வகையில் பாராட்டலாம்.. ஒன்றே ஒன்று அவளை மிகவும் பாராட்டவேண்டிய கட்டாயம் அவன் ஒருவனைத்தவிற வேறொருவனை மனதில் நினைக்கவில்லை... அந்த வகையில் அவள் கன்னியமான நாயகியை பாராட்டலாம்... பதிவிற்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 22. தினம் அழுது தீர்த்தும் வற்றியபாடில்லை என் கண்ணீர்...//

  ஓ இது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவமா.. ?பிழையிருந்தால் மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 23. சென்னை பித்தன் சொன்னது…
  இன்றைய வாழ்க்கையின் யதார்த்தம்.//////

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 24. விக்கியுலகம் சொன்னது…
  கதை போல கவிதை, யதார்த்தம் அருமை!//////


  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 25. மாய உலகம் சொன்னது…
  இக்கதையின் நாயகி மிகவும் பலகீனமாக இருக்கின்றாள்.. முகம் தெரியாத ஒருவன் பேசிய அனைத்து பேச்சுக்கும் ஒரு இடத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இடம் கொடுத்திருக்கிறாள்... நல்ல வேளை அவள் சீரழித்தது போல் சம்பவம் அமையாதது போல் அமைந்திருக்கிறது பதிவு... அந்த வகையில் பாராட்டலாம்.. ஒன்றே ஒன்று அவளை மிகவும் பாராட்டவேண்டிய கட்டாயம் அவன் ஒருவனைத்தவிற வேறொருவனை மனதில் நினைக்கவில்லை... அந்த வகையில் அவள் கன்னியமான நாயகியை பாராட்டலாம்... பதிவிற்கு பாராட்டுக்கள்////////

  உங்கள் கருத்து உண்மையானது, எனக்கு கூட விளங்காத ஒரு விடயம் என்றால் அது அந்த பெண் எவ்வாறு ஒரு முகம் தெரியாதவன் மீது இவ்வளவு காதல் கொண்டாள் என்பது தான். எனினும் ஏதோ ஒரு படத்தில் கூறுவது போல காதல் என்பது தானாக தோன்றும் அதற்கு வரையறை எல்லாம் கிடையாது என்பதற்கு அந்த பெண் மட்டும் என்ன விதி விலக்கா என்ன..

  பதிலளிநீக்கு
 26. மாய உலகம் சொன்னது…
  தினம் அழுது தீர்த்தும் வற்றியபாடில்லை என் கண்ணீர்...//

  ஓ இது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவமா.. ?பிழையிருந்தால் மன்னிக்கவும்//////////

  நீங்கள் மன்னிப்பு கேட்க அவசியமே இல்லை, இது என்னை மிகவும் பாதித்த ஒரு உண்மை சம்பவம். அதை அனைவருடனும் பகிர ஆசைப்பட்டேன், பகிர்ந்தேன் அவ்வளவு தான்.. இப்பொழுது அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க போகிறது, இருந்தாலும் அப்பெண்ணின் உண்மையான நிலைமை தான் இது. அவளின் எதிர்கால வாழ்கை பொருட்டு அவள் பெயரை நான் வெளியிடவில்லை..

  பதிலளிநீக்கு
 27. Vinodhini சொன்னது…
  காதல் என்பது தானாக தோன்றும் அதற்கு வரையறை எல்லாம் கிடையாது என்பதற்கு அந்த பெண் மட்டும் என்ன விதி விலக்கா என்ன..//

  உண்மை தான்... காதல் வந்தால் குருடனும் ஓவியனாகிவிடுவான்... அறிவாளியை முட்டாளாக்கும், முட்டாளை அறிவாளியாக்கும்... வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்... அது இரு நல்ல மணங்கள் சரியாக அமைந்தால் ஜெயிக்கும்... ஒரு பக்கம் பலகீனமாக இருந்தாலும் அது தோற்கும்... மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 28. Vinodhini சொன்னது…
  இது என்னை மிகவும் பாதித்த ஒரு உண்மை சம்பவம். அதை அனைவருடனும் பகிர ஆசைப்பட்டேன், பகிர்ந்தேன் அவ்வளவு தான்.. இப்பொழுது அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க போகிறது, இருந்தாலும் அப்பெண்ணின் உண்மையான நிலைமை தான் இது. அவளின் எதிர்கால வாழ்கை பொருட்டு அவள் பெயரை நான் வெளியிடவில்லை..//

  ஓ.. அந்த பெண்ணின் வாழ்க்கை சந்தோசமாக அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.. அப்பெண்ணிற்கு திருமண நல்வாழ்த்துக்கள்... பகிர்ந்தமைக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 29. பாதிக்கப்பட்ட அந்தப்பெண் சகஜ வாழ்விற்கு சீக்கிரமே மீண்டு வரட்டும்.

  பதிலளிநீக்கு
 30. முகப்புத்தக நட்புகளை அழகுற பதிவிட்டிருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 31. மாய உலகம் சொன்னது…
  Vinodhini சொன்னது…
  காதல் என்பது தானாக தோன்றும் அதற்கு வரையறை எல்லாம் கிடையாது என்பதற்கு அந்த பெண் மட்டும் என்ன விதி விலக்கா என்ன..//

  உண்மை தான்... காதல் வந்தால் குருடனும் ஓவியனாகிவிடுவான்... அறிவாளியை முட்டாளாக்கும், முட்டாளை அறிவாளியாக்கும்... வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்... அது இரு நல்ல மணங்கள் சரியாக அமைந்தால் ஜெயிக்கும்... ஒரு பக்கம் பலகீனமாக இருந்தாலும் அது தோற்கும்... மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்//////////

  மிக்க நன்றி, உங்கள் கருத்துக்களே எனக்கு ஊக்க மருந்து...

  பதிலளிநீக்கு
 32. மாய உலகம் சொன்னது…
  Vinodhini சொன்னது…
  இது என்னை மிகவும் பாதித்த ஒரு உண்மை சம்பவம். அதை அனைவருடனும் பகிர ஆசைப்பட்டேன், பகிர்ந்தேன் அவ்வளவு தான்.. இப்பொழுது அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க போகிறது, இருந்தாலும் அப்பெண்ணின் உண்மையான நிலைமை தான் இது. அவளின் எதிர்கால வாழ்கை பொருட்டு அவள் பெயரை நான் வெளியிடவில்லை..//

  ஓ.. அந்த பெண்ணின் வாழ்க்கை சந்தோசமாக அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.. அப்பெண்ணிற்கு திருமண நல்வாழ்த்துக்கள்... பகிர்ந்தமைக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்//////////

  உங்கள் வாழ்த்துக்கள் அந்த பெண்ணின் வாழ்வை மாற்றி அவளுக்கு நல்லதொரு எதிர் காலத்தை கொடுக்கட்டும், மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 33. அம்பலத்தார் சொன்னது…
  பாதிக்கப்பட்ட அந்தப்பெண் சகஜ வாழ்விற்கு சீக்கிரமே மீண்டு வரட்டும்.////

  உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 34. அம்பலத்தார் சொன்னது…
  முகப்புத்தக நட்புகளை அழகுற பதிவிட்டிருக்கிறீர்கள்//////

  வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 36. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

  பதிலளிநீக்கு
 37. anubavithavargalukku adhan valiyum vedhanyum puriyum. menmaiyana manadhaikondavargalukkum dhan. anaal enadhano endru padippavargalukku edhuvum puriyadhu. dhinam dhinam ulagil ella idathilum nadakkum nigalvudhan idhu

  பதிலளிநீக்கு
 38. மாய உலகம் சொன்னது…
  தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...////////

  உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 39. Siva சொன்னது…
  anubavithavargalukku adhan valiyum vedhanyum puriyum. menmaiyana manadhaikondavargalukkum dhan. anaal enadhano endru padippavargalukku edhuvum puriyadhu. dhinam dhinam ulagil ella idathilum nadakkum nigalvudhan idhu///////////

  ஆம் நீங்கள் கூறுவது உண்மையான கருத்து, அனுபவிப்பவர்களுக்கு தான் அந்த வேதனை புரியும், எங்களால் என்ன கூறியும் அவர்களை சமாதனப்படுத்த முடியாது.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே..

  பதிலளிநீக்கு
 40. ungalal samadhaana padutha mudiyadhu endru kuravillai. adhan valiyum vedhanaiyum anubavithavaruku puriyum endru mattume sonnen. ungal eluthu thodarattum

  பதிலளிநீக்கு
 41. மிக அழகாக இருந்தது சோகமாக இருந்தாலும்.
  சில நேரங்களில் சோகம் சுகமாவும் தெரிகிறது

  பதிலளிநீக்கு
 42. Vinodhini கதையைப் படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்கலாம் என்றால், இத்தனை பின்னூட்டங்களைத் தாண்டித் தான் வர வேண்டியிருக்கிறது. எல்லா பின்னூட்டங்களையும் படித்தவுடன் இப்படி பின்னூட்டம் இடுகிறேன்

  காதல்(கள்) எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தோன்றலாம், அது பேஸ் புக் ஆகவும் இருக்கலாம். ஆனால் இழப்பு எல்லா நேரத்திலும் ஒன்று தான் :( Arun Kumar சொன்னது…
  மிக அருமையாக சொல்லியிருக்கிறார். இன்று பேஸ்புக் அல்ல அதைத் தாண்டியும் எப்படியோ காதல் இன்றைய வாழ்க்கைமுறைக்கு ஏற்றபடி,மாறிக் கொண்டு வருகிறது. காதல் மட்டுமில்லை தாய்மைக் கூட மாறிக் கொண்டு தான் வருகிறது.
  ஆண்களையும் அவர்களது பொய் வார்த்தைகளையும் நம்பி ஏமாந்த பெண்கள் ஏராளம்.ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.பிரிவுகள் என்பது நிரந்தரமில்லை.எல்லாம் நன்மைக்குத்தான் தோழி சித்தாரா மகேஷ். சொன்னது…
  பொய் என்று சொல்லிவிட்டால் யாரிடம் தான் பொய்யில்லை. ஏமாறும் வார்த்தைகளை பேசுவதில் பாரபட்சம் இல்லை. இருப்பினும் பெண்கள் ஏமாற அதிகம் காரணம் படிப்பறிவு இருந்தும் கல்வி அறிவின்மையே...
  Vinodhini சொன்னது… ஆம் தோழி உங்கள் கருத்து சரியானது, இந்த காதல் வந்து தாக்கும் பொழுது, அவர்களின் குறைகள் கூட நிறைகளாகவே தோன்றுகின்றன. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். மீண்டும் வருக.. :)
  உண்மையில் இது இருபாலருக்கும் பொதுவானது தான். காதல் ஏன்? அன்பிருக்கும் இடத்தில் கண்களுக்கு குறை தெரிவதில்லை. ஒரு சமூகத்தில் காதல் தன்னிலையிழக்கும் பொழுது, அந்த சமூகத்தின் வீரமும் தன்னிலையை இழக்கிறது. அப்படி பார்க்கையில் இரண்டுமே தன்னிலையை இழந்துக் கொண்டிருக்கும் சமூகத்தில் ஆண்களும், பெண்களும் மாறி மாறி குறைச் சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.
  மன்னிக்கவும் இந்த கதை என்னை மிகவும் பாதித்ததால் தான் இவ்வளவு எழுதுகிறேன்.
  நீ என்னுடன் இருந்தால் காலம் முழுவதும் உன் வாழ்வு - கண்ணீரில் கரையும் என்றாய்..
  இதோ இந்த வார்த்தையே ஆண் மகனிடம் உள்ள வீரத்திற்கு எடுத்துக் காட்டு... அதை ஏற்கும் பெண்ணின் மனதில் உள்ள காதலுக்கு எடுத்துக்காட்டு. இங்கே காதலுக்கான முயற்சி நடந்திருக்கிறது. இருப்பினும் அந்த முயற்சியில் இருவரும் தோற்கவில்லை.ஏனெனில் அவர்கள் தொடரவே இல்லை. தோற்றால் பாடம் கற்கலாம். ஆனால் விலகல் என்றுமே பாடத்தை சொல்லித் தராது. எனவே தான் இந்த சமூகம் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட காதலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இனியும் சந்தித்துக் கொண்டுத் தான் இருக்கும்.
  அதிகமாக இருந்தால் மன்னிக்கவும். அருமையான பதிவு என்னை இந்தளவு எழுத வைத்துவிட்டது

  பதிலளிநீக்கு
 43. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 44. அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

  என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com

  பதிலளிநீக்கு
 45. சொந்த அனுபவமா தோழி! கதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 46. நான் வலைத்தளத்தில் இருந்து சில சொந்த காரணங்களால் ஒதுங்கி இருந்த சந்தர்ப்பதில், என் வலைத்தளத்திற்கு வந்து, என் ஆக்கங்களை படித்து, கருத்துரைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைத்து நண்பர் நண்பிகளுக்கும் என் நன்றிகள்..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தடங்கலுக்கு வருந்துகிறேன்...

ரசித்ததும், எழுதியதும்..

உடைந்த கனவுகள் - உள்ளக்குமுறல்