ரசித்ததும், எழுதியதும்..


காத்திரு என்று கனவில் கூறினாய்..
நினைவில் அதை கூறி இருந்தால்..
காத்திருந்திருப்பேன் ஆயுள் முடியும் வரை..


உன் நாமத்தை பேனா முனை கொண்டு செதுக்கி,
உன் உருவத்தை விழிகளால் வீடியோ பண்ணி,
உள்ளத்திரையில் கலர் கனவுகளாக,
மீண்டும் மீண்டும் மீட்டுக்கொண்டிருக்கிறேன்,
நடு நிசியில்....


இருளாய் கிடந்த என் இதயத்துள்,
காதல் தீபத்துடன் குடியேறிய காதலனே,
என் நெஞ்சை கொழுத்தி விட்டு போவாய் என,
நான் கனவிலும் கருதவில்லை...


நீ இருந்த என் இதயத்தில்,
இன்னொருத்தனுக்கு இடம் இல்லை,
என் மணவறையில் மகரந்த மணம் வீசும் - உன்
நினைவுகளை அணைத்த படியே,
என் ஆயுள் கழிகிறது...


மெய் மறந்து நின்றேன் - உனை பார்த்த அன்று
கண் கலங்கி நிற்கின்றேன் - உனக்காக இன்று


கனமான காதலை சொல்ல வரும் போது !
எப்போதும் எனக்கு பேச்சற்று போகிறது !
நீயோ உன்னில் ஊரும் அன்பை -
உருக்கமாக சொல்கிறாய் !
என் இதய அறையில் அக்குரல்கள் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன !
நானோ - மௌனமாக காதலை வெளிப்படுத்துகின்றேன் !
நீயோ - நான் வெறுக்கிறேன் என்று கலக்கம் அடைகிறாய் !
எப்படியாவது நானும் உன்னை காதலிப்பதை புரிந்து கொள் !


தூக்கத்தில் கனா வந்தது, கூடவே கவிதையும் வந்தது..
கண் விழித்தேன் கனவு இல்லை, கவிதையும் இல்லை..
நீ விட்டு சென்ற நினைவுகள் மட்டுமே - இதயத்தில் ரணமாக..நீ என் வாழ்கையில் இணைந்திருந்தால்..
என் எதிர்காலம் சந்தோஷமாக கழிந்திருக்குமே..
நீ என் துணையாக இணையாதது???
சந்தோஷம் என்பது எனக்கு எட்டாத கனி என்பதால் போலும்..
கருத்துகள்

 1. தமிழ் சினிமாவுல கவிஞர் " தாமரைக்கு "
  அடுத்த சீட் காலியா இருக்கு.. இன்னும்
  கொஞ்சம் முயற்சி பண்ணினா.. பிடிச்சிடலாம்..

  பதிலளிநீக்கு
 2. காதலைச் சொல்ல முடியாத இயலாமை கவிதைகளில் தெரிகிறது. முதன்முதலில் காதலைச்சொல்லுவதே ஒரு சுகம்தான்.
  //உன் நாமத்தை பேனா முனை கொண்டு செதுக்கி,
  உன் உருவத்தை விழிகளால் வீடியோ பண்ணி,
  உள்ளத்திரையில் கலர் கனவுகளாக,//
  எப்படிங்க இப்படி? சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. வெங்கட் சொன்னது…
  தமிழ் சினிமாவுல கவிஞர் " தாமரைக்கு "
  அடுத்த சீட் காலியா இருக்கு.. இன்னும்
  கொஞ்சம் முயற்சி பண்ணினா.. பிடிச்சிடலாம்..//////

  ஹி ஹி ஹி அதெல்லாம் வேண்டாம் சார்.. உங்கள் ஆதரவே போதும்..

  பதிலளிநீக்கு
 4. விச்சு சொன்னது…
  காதலைச் சொல்ல முடியாத இயலாமை கவிதைகளில் தெரிகிறது. முதன்முதலில் காதலைச்சொல்லுவதே ஒரு சுகம்தான்.
  //உன் நாமத்தை பேனா முனை கொண்டு செதுக்கி,
  உன் உருவத்தை விழிகளால் வீடியோ பண்ணி,
  உள்ளத்திரையில் கலர் கனவுகளாக,//
  எப்படிங்க இப்படி? சூப்பர்.//////

  மிக்க நன்றி நண்பரே.. உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு ஊக்கம்..

  பதிலளிநீக்கு
 5. இன்று தான் தங்கள் தளம் வருகிறேன்.வாழ்த்துக்கள் நிச்சயம் தொடர்வேன்.வார்தைகளில் வலி தெரிகிறது சொந்தமே..இப்படி சொல்லாத காதல்கள் தான் கடல்களின் அலையாய் இரைந்து போகிறதோ????சந்திப்போம் சொந்தமே

  பதிலளிநீக்கு
 6. Athisaya சொன்னது…
  இன்று தான் தங்கள் தளம் வருகிறேன்.வாழ்த்துக்கள் நிச்சயம் தொடர்வேன்.வார்தைகளில் வலி தெரிகிறது சொந்தமே..இப்படி சொல்லாத காதல்கள் தான் கடல்களின் அலையாய் இரைந்து போகிறதோ????சந்திப்போம் சொந்தமே///////

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 7. கணணிக்கல்லூரி சொன்னது…
  ரசித்ததும், எழுதியதும்..: அருமையான.....

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 8. //வந்துட்டிங்களா????? இனிமே உருப்பட்ட மாதிரி தான்... :P //

  ஏங்க?

  கவிதை வலியோட இருக்கு.. நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 9. ஹாரி பாட்டர் சொன்னது…
  //வந்துட்டிங்களா????? இனிமே உருப்பட்ட மாதிரி தான்... :P //

  ஏங்க?

  கவிதை வலியோட இருக்கு.. நல்லா இருக்கு..///////

  மிக்க நன்றி தோழரே..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தடங்கலுக்கு வருந்துகிறேன்...

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?