க்ரீஸ் மேன்... பீ கேர்புல்... (Grease Man - Be Careful)

இலங்கையில் தீவிரவாதிகளை பார்த்து பயந்ததை விட மக்கள் அதிகமாக பயப்படுவது இந்த கிரீஸ் மனிதர்களுக்கே..

அதென்னடா அது "கிரீஸ் மனிதன்" என்று முழிக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்காக இதோ கிரீஸ் மனிதன் பற்றி சிறியதொரு அறிமுகம்..

இலங்கையில் பல பிரதேசங்களில் இரவினில் உடம்பு முழுவதும் கிரீஸ் (Grease) பூசிக்கொண்டு தனிமையில் செல்லும் பெண்களை தாக்கும் இந்த கிரீஸ் மனிதன் பல வன்முறை சம்பவங்களுக்கு மூல கர்த்தாவாக திகழ்கிறான். பலர் பலவிதமாக கதைகள் கூறினாலும் கூட, உண்மையாகவே இந்த கிரீஸ் மனிதனால் பாதிக்க பட்ட பெண்கள் சிலர் உடல் பாகங்களை கூட இழந்தது மிக வருத்ததிட்குரியதாகும். எது எவ்வாறாயினும் இந்த கிரீஸ் மனிதர்களின் அட்டகாசத்தால் சில பல பெண்கள் வெளியில் செல்வதை கூட தவிர்த்தனர். ஒரு சில இடங்களில் தனி ஆளாகவும், இன்னும் சில இடங்களில் கூட்டமாகவும் உலா வரும் இந்த மர்ம மனிதர்கள் (இவர்களை மனிதர்கள் எனது கூறலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் எழுதுகிறேன் - யாரும் புண்ணியவான் இருப்பின் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்) அரசாங்கத்தின் உதவியுடன் இக்காரியத்தை செய்வதாக பல கதைகள் தோன்றி மறைகின்றன, சிலர் நம் ஜனாதிபதிக்கு ஏதோ கெட்ட காலம் அதனால் பால் கொடுக்கும் தாய்மாரின் கொங்கைகளை பரிகாரமாக பலி கொடுத்தால் கெட்டது எல்லாம் நீங்கிவிடும் என்றும், பலர் படையினரின் கைங்கர்யம் எனவும், இன்னும் சிலர் புதையல் தேடும் நடவடிக்கைக்காக இந்த பலிகள் நடைபெறுகின்றன எனவும் தமக்கு விருப்பமான முறையில் கதைகளை கட்டிக்கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவென்று அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆரம்பத்தில் இலங்கையின் பல பிரதேசங்களில் இந்த கிரீஸ் மனிதன் வந்து போனாலும் கூட எந்த வித திருட்டு சம்பவங்களும் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என கேள்வி, ஆனாலும் நான் வாசிக்கும் மத்திய மாகணத்தில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் முதன் முதலாக பதிவாகின, அதன் பின்னர் மற்ற இடங்களிலும் கிரீஸ் மனிதன் கைங்கர்யம் தொடர்ந்தது.

இந்த கால கட்டத்தில் கிரீஸ் மனிதன் தொல்லை கொஞ்சம் குறைந்து இருந்தாலும், எதிர் காலத்தில் அவ்வாறனதொரு இக்கட்டான சூழ்நிலை தோன்றினால் என்ன செய்யலாம்? எவ்வாறு அந்த கயவர்களை எதிர் கொள்ளலாம் என நான் என் மண்டையை குடைந்து குடைந்து யோசித்த பொது, டபார் என தோன்றியது என் கபாலத்தில் ஒரு ஐடியா. :O (ஹா ஹா நாங்க எல்லாம் யாரு சானக்கியனுக்கே தந்திரம் சொல்லிக்குடுக்குறவங்க!!!! ஹி ஹி ஹி)

(இப்ப நாம இந்த செந்தமிழை விட்டு பேச்சு தமிழுக்கு தாவலாம்.. ஹி ஹி ஹி)

கிரீஸ் மனிதன் அச்சுறுத்தல் இருக்கவங்க எல்லாம் அவனை பிடிக்க பண்ண வேண்டியது ஒரே வேலை தான், ராத்திரி எல்லாம் கண் முழிக்கணும், அலர்ட்டா இருக்கனுமுள்ள அப்ப தான் யாராலும் நம்மள ஏமாத்த முடியாது.. ஆங்ங்ங்..

ராத்திரி முழுக்க கண்விழிச்சாலும் அவன் வராம போற சந்தர்ப்பங்கள் இருக்கலாம், ஆனா அதுக்கெல்லாம் சலிச்சிக்க கூடாது, பிகாஸ் அவன புடிக்கிறது தான் நம்ம குறிக்கோள் ஓகே.. சோ நாம முழிச்சி தான் ஆகனும், அப்போ தான் வருவார் நம்ம கிரீஸ் மனிதன், நாம என்ன பண்ணணும்ன டக்குனு வெளிய ஓடி வந்து அம்மா இவன் கைய புடிச்சிட்டன் அய்யா இவன் என்ன கொல்ல பாத்தான்னு டக்குனு முழு ஊருக்கே கேக்க கத்தனும். அப்ப நம்ம பிறர் நலமுடைய ஊர் மக்கள் எல்லாம் உடனே வெளிய வந்து அவன வளைச்சி பிடிச்சிருவாங்க.

அவன் உடம்பு முழுவதும் கிரீஸ் பூசி இருக்குற நால அவன புடிக்க அவன் மேல கோணி பை/ சாக்கு போட்டு புடிச்சிரலாம், புடிச்ச உடனே போலீஸ்க்கு பாரம் குடுக்கப்படாது, ஏன்னு கேட்டிங்கன்னா எத்தன நாள் நம்ம தூக்கத்த கெடுத்தான், அது நால நல்ல போட்டு மிதி மிதின்னு மிதிச்சிட்டு தன அப்புறம் போலீஸ்க்கு கால் பண்ணி வாரச்சில்லி பத்திரமா பாரம் குடுக்கணும், நம்ம வீர போலீஸ் மக்கள் என்ன செய்வாங்கன்னா, கஷ்டப்பட்டு நாம புடிச்சி குடுத்த கிரீஸ் மனிதன லேசா நோகம வெளிய விட்டுருவாங்க, அதுக்காக நம்ம கவலை படக்கூடாது, ஏன்னா நாம தான் அவனுக்கு 6 மாசத்துக்கு எழும்பவே முடியாத மாறி அடிச்சிட்டோம்ல. இனி அவன் குழந்தைய கூட இந்த தொழில் செய்ய விட மாட்டான்..

இந்த கதையில் வரும் யாவும் கற்பனையே. நான் போலீஸ் பத்தி உண்மை சொல்லவும் இல்லை, அரசாங்கம் பத்தி உண்மை சொல்லவும் இல்லை. :))
GOD BLESS MY COUNTRY

கருத்துகள்

 1. ஆஹா இதென்னெங்க... ஃபாலோயர்ஸ் பாக்ஸ்க்கு மேல //வந்துட்டிங்களா????? இனிமே உருப்பட்ட மாதிரி தான்... :P//

  ஆஹா....... என்னங்க இப்படி சொல்லிட்டீங்க அவ்வ்வ்வ் ஹா ஹா

  பதிலளிநீக்கு
 2. ஹி ஹி ஹி எல்லாம் ஒரு கொலை வெறி தான்..

  பதிலளிநீக்கு
 3. சில வருடம் முன்னாடி புதுதில்லியில் குரங்கு மனிதன் அட்டகாசம்னு ஒரெ புரளி, மொட்டைமாடியில் இரவில் தூங்குபவர்களை தான் அது தாக்குமாம். இரண்டு மாதம் இப்படி ஒரே பிரச்சனை. கடைசியில் என்ன ஆச்சுன்னே தெரியாம எல்லாரும் அத மறந்து விட்டு வேற விசயத்தை பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதை போலவே க்ரீஸ் மனிதன் மேட்டரும் ஆகட்டும்

  பதிலளிநீக்கு
 4. ஆமாம் நீங்கள் கூறியது சரியே, நம் மக்கள் எதையும் இலகுவாக மறப்பதில் கெட்டிக்காரர்கள் தானே, இந்த கிரீஸ் மனிதன் விவகாரமும் இப்பொழுது அப்படி தான் ஆகி விட்டது, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தடங்கலுக்கு வருந்துகிறேன்...

ரசித்ததும், எழுதியதும்..

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?