இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்ல டா சாமி..

வை மீ லோர்ட்???
இந்த உலகத்துல தன்னோட வேலைய பார்க்காம அடுத்தவன் விஷயத்தில தலையிடும் புண்ணியவான்கள் நிறையவே இருக்காங்க. அது வெளியில மட்டுமில்லைங்க நம்ம வீட்ல கூட இருப்பாங்க. வெளில சொன்னாலும் சொல்லட்டியும் நம்ம எல்லாருக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் நிறையவே இருக்கும்.. அவங்க பாட்டுக்கு ஏதோ சொல்லி நம்மள குழப்பி விட்டுட்டு போயிருவாங்க ஆனா கடைசியா நம்ம தலை தான் டைம் போம் மாறி இப்போ வெடிக்குமோ அப்போ வேடிக்குமொனு ஆகிடும். என்ன கொடும சரவணன் இது..



இதோ சில நொந்து நூல் ஆகிய சந்தர்ப்பங்கள்..

நாம பாட்டுக்கு வீட்ட பூட்டிட்டு சிவனேன்னு வெளிய போய்கிட்டு இருப்போம், அப்ப வந்து கேப்பாங்க பாருங்க,
புண்ணியவான் :  ஒழுங்கா வீட்ட பூட்டினியா???????
நாம : !@#$%^&*

ஒரு தூரப்பயணம் புறப்பட்டு போகும் போது நாம நமக்கு தேவையான எல்லாத்தையும் கரெக்டா எடுத்து வச்சி தான் இருப்போம், ஆனா நம்மள வழி அனுப்ப வாரவங்க இருக்கங்களே, அதை எடுத்தியா இதை எடுத்தியான்னு கேட்டே நம்மள கன்பியுஸ் பண்ணிருவாங்க.

எப்படியாவது கஷ்டப்பட்டு நாம ஒரு நல்ல தொழில் தேடி கடவுளேன்னு அதுக்கு போய்கிட்டு இருப்போம், ஆனா நம்ம புன்னியவான்ஸ் இருக்கங்களே, அங்க நல்ல வேல இருக்கு இங்க நல்ல வேல இருக்குன்னு நம்ம வீட்டார கன்பியுஸ் பண்ணி நம்ம நிம்மதிய கெடுத்துட்டு அவங்க நிம்மதியா இருப்பாங்க.

கஷ்டம்னு நிக்கிற நேரம் யாருமே உதவிக்கு வரமாட்டாங்க ஆனா, நாம ஏதோ ஒரு வகைல செட்டில் ஆகிட்ட பிறகு "ஒஹ்" ன்னு ஓ போட்டு அப்புறம் "ஆ" ன்னு வாய் பிளந்து, ஈ ன்னு பல்ல இளிச்சிக்கிட்டே வந்து ஐடியா தாரேன் மண்ணாங்கட்டி தாரேன்னு சொல்லி, எங்கள இல்ல எங்க வீட்டக்கள குழப்பி, அந்த குழம்பின குட்டைல மீன் பிடிக்க ட்ரை பண்ணுவாங்க. நாம அலேர்டா இல்லாட்டி சங்கு நமக்கே.


நாம ஆச ஆசையா ஒரு டிரஸ் வாங்கி சந்தோஷமா அதை வெளியில உடுத்திட்டு போவோம், அப்பா வருவாங்க நம்ம புன்னியவான்ஸ் ப்ரீயா ஒப்பினியன் சொல்லுவாங்க, இந்த கலர் சூட் ஆகலியே, இந்த டிசைன் நல்லா இல்லையே, உங்க முகம் இந்த டிரஸ்கு இருண்டிருக்கே, இந்த ஹேர் ஸ்டைலுக்கு மெலிஞ்ச மாறி இருக்கிங்களேன்னு. அப்போ நம்மளுக்கும் தோணும் "ஆஹா உண்மையா இருக்குமோ?????" நாம குழம்பினதும் அவங்க தெளிவா போயிருவாங்க, குழப்பிவிட்ட நிம்மதியோட. 



இதுல எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா, கேளுங்க எல்லார் கருத்துக்களையும் கட்டயமா கேளுங்க ஆனா தேவையானதை இன்ஸ்டால் பண்ணிக்கிட்டு தேவை இல்லாததை ரிஜெக்ட் பண்ணிருங்க. அப்போ தான் இந்த கொசுத்தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்.

கருத்துகள்

  1. நல்ல கருத்து தான் ,நம் விசயத்தில் நாம் தெளிவாக இருப்போம் .யார் வந்து என்ன சொன்னாலும் !

    பதிலளிநீக்கு
  2. ஆம் நாம் தெளிவாகத்தான் இருக்கிறோம், ஆனாலும் நம்மை குழப்புவதை குறிக்கோளாகக்கொண்டு வருபவர்களுக்கு என்ன செய்வது??வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள், மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு
  3. பத்து பத்து பேரு பத்து விதமா சொன்னா நமக்கென்னங்க டிசைட் நம்மளதா இருந்தா குழம்ப தேவையில்லையே... உண்மையில் இந்த மாதிரி தொல்லைகள் நம்ம வீட்டிலிருந்து ஆரம்பிக்கும்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மாய உலகம் சொன்னது…
    பத்து பத்து பேரு பத்து விதமா சொன்னா நமக்கென்னங்க டிசைட் நம்மளதா இருந்தா குழம்ப தேவையில்லையே... உண்மையில் இந்த மாதிரி தொல்லைகள் நம்ம வீட்டிலிருந்து ஆரம்பிக்கும்... வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள், ஆமா, இதெல்லாம் சரியாக எதிர்கொள்ள விட்டால் சமுதாயத்தில் வாழ முடியாது..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்..இனி தொடர்ந்து வருவேன்

    அன்புடன்
    கே.எஸ்.எஸ்.ராஜ்

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி கே.எஸ்.எஸ்.ராஜ் அவர்களே, தொடர்ந்து வருக.

    பதிலளிநீக்கு
  7. அவ்வ்வ்வ்வ் இது எல்லார் வீட்லயும் இருக்கு...!!!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்,தொடர்ந்து வருக.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா...அருமை...
    அந்தக் குட்டைல நாமலும் தவறி விழுந்திருக்கோம்ல...
    என்ன பண்ண..
    இனி கவனமா இருக்கனும்...

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் ஆமாம் கட்டயமா எல்லோருக்கும் அந்த அனுபவம் உண்டு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மீண்டும் வருக..

    பதிலளிநீக்கு
  11. முதல் முறை உங்கள் வலைபூவிற்கு எனது வருகை .
    வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்,தொடர்ந்து வருக.

    பதிலளிநீக்கு
  13. ஆகா அனைத்தும் மிக அற்புதமான மிகமிக அருமையான கிறுக்கல்கள்...மேலும் நன்றாக கிறுக்க என் வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  14. இதுல எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா, கேளுங்க எல்லார் கருத்துக்களையும் கட்டயமா கேளுங்க ஆனா தேவையானதை இன்ஸ்டால் பண்ணிக்கிட்டு தேவை இல்லாததை ரிஜெக்ட் பண்ணிருங்க. அப்போ தான் இந்த கொசுத்தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்./////////

    ஆஹா அருமையான கருத்து சகோதரி!

    பதிலளிநீக்கு
  15. // வணக்கம்...
    வந்துட்டிங்களா????? இனிமே உருப்பட்ட மாதிரி தான்... :P //

    ஹா., ஹா., ஹா..!!!

    யாரு.. நீங்களா.? நாங்களா.?
    உங்க ப்ளாக்கா..?!!

    பதிலளிநீக்கு
  16. ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் சொன்னது…
    ஆகா அனைத்தும் மிக அற்புதமான மிகமிக அருமையான கிறுக்கல்கள்...மேலும் நன்றாக கிறுக்க என் வாழ்த்துக்கள்.....//

    வருகைக்கும். கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்து வருக..

    பதிலளிநீக்கு
  17. arunrajamani சொன்னது…
    செம அனுபவம் போல...//

    ஆமாம் கதற கதற அடி பட்டிருக்கோம், ஆனால் எல்லா அனுபவத்தையும் ஒரு பாடமாக எடுத்து போராட இந்த வாழ்கை கற்றுக்கொடுத்தது..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்,தொடர்ந்து வருக.

    பதிலளிநீக்கு
  18. Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…
    இதுல எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா, கேளுங்க எல்லார் கருத்துக்களையும் கட்டயமா கேளுங்க ஆனா தேவையானதை இன்ஸ்டால் பண்ணிக்கிட்டு தேவை இல்லாததை ரிஜெக்ட் பண்ணிருங்க. அப்போ தான் இந்த கொசுத்தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்.
    ஆஹா அருமையான கருத்து சகோதரி!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணி சார்..

    பதிலளிநீக்கு
  19. வெங்கட் சொன்னது…
    // வணக்கம்...
    வந்துட்டிங்களா????? இனிமே உருப்பட்ட மாதிரி தான்... :P //
    ஹா., ஹா., ஹா..!!!
    யாரு.. நீங்களா.? நாங்களா.?
    உங்க ப்ளாக்கா..?!!////////

    ஹி ஹி ஹி கஷ்டமான கேள்வி சார், நீங்களாவும் இருக்கலாம், நாங்களாவும் இருக்கலாம், இதெல்லாம் கண்டுக்கபடாது..
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?