அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

மனோதத்துவம் பற்றிய சின்ன கருத்துரை....


ஒரு கூட்டுல 5 குரங்குகளை வைத்து அந்த கூட்டுல உச்சத்தில் ஒரு வாழப்பழத்தை கட்டி தொங்க விட்டு விட்டு அந்த வாழைப்பழத்தை எடுப்பதற்கு வசதியாக ஒரு ஏணியையும் வைத்து விடுக.. (இப்படி எல்லாம் சொல்றேண்டு செஞ்சிராதிங்கோ ஓகே) கொஞ்ச நேரத்தில் அந்த 5 ல ஒரு மங்கி ஐ மீன் குரங்கு (ஹி ஹி) அந்த வாழைப்பழத்துக்கு ரூட் விட்டு ஏணி மேல லைட்டா கைய வைக்கும், அப்போ நீங்க பண்ண வேண்டியதெல்லாம் வெடுக்கெண்டு ஐஸ் வாட்டர அந்த ஆல் மன்கீஸ் மேலயும் வீசணும்.. அதே மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மங்கி ட்ரை பண்ணும், அப்பவும் நீங்க அதே போல ஐஸ் வாட்டர எடுத்து வீசணும்.. அப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல 3 வது மங்கி ஏணி மேல கைய வைக்கும் போதே மத்த எல்லா மங்கியும் அதை தடுத்து நிறுத்தும்.. ஓகேயா!!!!

இப்போ நாம பண்ண வேண்டியதெல்லாம் என்னன்னா அந்த 5 குரங்குல 1 குரங்க வெளிய எடுத்துட்டு புதுசா ஒரு குரங்க உள்ள போடனும்.. புதுசா வந்த ஆசாமிக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க அப்ப அவர் என்ன பண்ணுவார்???????? நைஸா வாழப்பழத்த எடுக்க ட்ரை பண்ணுவார் அப்ப உடனே நடக்கும் பாருங்க கச்சேரி, மத்த 4 குரங்கும் சேர்ந்து குடுப்பாங்க அவருக்கு... இப்ப நாம இன்னொரு முறை அதே மாதிரி பழைய குரங்க வெளிய எடுத்துட்டு புதுசா ஒன்னோருதர உள்ள போடனும், அவரும் அதையே செய்ய ட்ரை பண்ணும் போது பழைய 3 பெரும் அவரையும் போட்டு தாக்குவாங்க, ஏற்கனவே அடி வாங்குன ஒருத்தர் இருப்பரே அவருக்கு என்ன நடக்குதுன்னே தெரியாது, ஆனாலும் தான் அடிவாங்குன நால, மாட்டிகிட்ட புது ஆசாமிய சந்தோஷமா 2 எக்ஸ்ட்ரா கும்மு கும்முவார்..

இதே பிரசீஜர நாம தொடர்ந்து பண்ணனும், ஒரு கட்டத்துல ஐஸ் வாட்டரால நம்ம கிட்ட அடி வாங்குன ஒரு குரங்கு கூட அந்த கூட்டுக்குள்ள இல்லாம போன பின் புதுசா நாம இன்னொரு குரங்க போட்டு அந்த ஆசாமியும் வாழப்பழத்த எடுக்க ட்ரை பண்ணும் போது புதுசா வந்த அந்த 4 பேரும் அவரையும் நல்லா கும்முவாங்க, ஆனா அடிச்ச அந்த 4 பேருக்கும் சரி, அடி வாங்குன அந்த 1த்தருக்கும் சரி, எதுக்கு அடிச்சோம், எதுக்கு அடி வாங்குனோம்னு தெரியாது... ஆனா சொல்லி வச்ச மாறி யாருமே அந்த வாழைப்பழத்த எடுக்க ட்ரை பண்ண மாட்டங்க,

ஏன்னு கேட்டிங்கன்னா, அவங்க மைன்ட் எல்லாம் பழத்த எடுக்க ட்ரை பண்ணினா அடி விழும்ன்ற விஷயம் தான் வேலை செய்யும்.. நம்ம அரசியல்ல கூட வழி வழியா அது தான் நடந்துக்குட்டு வருது...

இதுக்கு நம்ம ப்ரில்லியன்ட் கபாலத்துல உதிச்ச ஐடியா என்னன்னு கேட்டிங்கன்னா.. எல்லா மங்கியையும் ஒரே நேரத்துல மாத்தி விடனும்.. அப்போ தான் புதுசா ஏதாவது செய்ய ட்ரை பண்ணுவாங்க.. இல்லாட்டி அவங்களும் பழத்த எடுக்க மாட்டங்க, எடுக்க வார புதுசையும் கும்மிருவாங்க.. எப்பூடி... சானக்கியனுக்கே ஐடியா குடுக்குரவங்கல்ல நாங்க.. :ப


என்னமா சண்ட புடிக்கிதுங்க பாரு, குரங்குல இருந்து தான்
வந்தோம்னு இத பார்த்தாலே நல்லா புரியுது.. 

கருத்துகள்

 1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. :)

  பதிலளிநீக்கு
 2. சானக்கியனுக்கே ஐடியா குடுக்குரவங்கல்ல நாங்க.. :ப... வாவ்... உண்மைதாங்க...
  மனிதனாக இருந்தாலும் குணத்தால் இன்னும் குரங்காகவே இருக்கிறோம் என்பதற்கு சமூகத்தில் நாம் ஃபாலோ பண்ணும் பல விசயங்களை சொல்லலாம்... அருமை

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றி. ஆமாங்க, நாம ஏன் செய்யிறோம் எதுக்கு செயிரோம்னே தெரியாம பல விஷயங்கள செய்யிறோம், விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறினாலும் சில பழக்கங்கள் மாற்ற முடியாதவை..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தடங்கலுக்கு வருந்துகிறேன்...

ரசித்ததும், எழுதியதும்..

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?