கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?

1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐப்பசி மாதம் 5ம் திகதி உலகளாவிய ரீதியில் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, என் தாய் திருநாடான இலங்கையில் 6 ம் திகதி கொண்டாடுவது வழமை. மாணவர்களுக்காக தங்களது வாழ்வையே அர்ப்பணித்த உண்மையான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இப்போது நாம் எமது பதிவிற்கு செல்லலாம்.

தற்கால கட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் உண்மையாகவே கற்றுக்கொடுக்க தகுதியானவர்களா?

ஆசிரியர்கள் என்று பாடசாலையில் இருக்கும் பொழுது நாம் எதற்கு எமது பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்புகின்றோம்?


நாம் கல்வி கற்கும் கால கட்டத்தில் உயர் தரம் படிக்கும் போது மட்டுமே பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றோம் ஆனால் இக்காலத்தில், 01 ம் வகுப்பிலிருக்கும் குழந்தை கூட பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்கிறதே?

எமது ஆசிரியர்கள் பட்டதாரிகள், அதை விட அனுபவம் மிக்கவர்கள், ஆனால் இப்பொழுது இருக்கும் ஆசிரியர்கள்? அவர்கள் உண்மையாகவே பட்டதாரிகள் தானா? அனுபவம் மிக்கவர்களா?

இவ்வாறான கேள்விகள் அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. இதைப்பற்றி விரிவாக சிந்திக்கும் போது, தற்போது அதிகமான ஆசிரியர்கள் ஏதோ போக்குக்கு ஆசிரியர்களாக இருக்கிறார்களே தவிர, சேவையாக கருதி செயல்பட வில்லை என்பதே உண்மை. அது மட்டுமில்லாது பாடசாலை நேரங்களில் வீண் பேச்சு பேசுவதும், குழந்தைகளின் தகுதிகள், அறிவு மட்டம் என்பவற்றை விமர்சிப்பதற்கே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கின்றது, இதில் எங்கு பாடம் சொல்லிக்கொடுக்க நேரம் எஞ்ச போகின்றது?

ஆசிரியர்களைப்பற்றி குறை கூறவோ அவர்களை சாடவோ இல்லை, எனினும் என் மனதில் தோன்றும் ஆதங்கத்தை தான் கூறுகின்றேன். காரணம், முன்பு நாங்கள் எல்லாம் கல்வி கற்கும் போது எல்லா விதமான பாடங்களும் எங்களுக்கு பாடசாலையிலேயே கற்பிக்கப்படும், ஆனால் தற்பொழுது நிலைமை மாறி உள்ளது, பிள்ளைகள் பாடசாலையில் கற்பதை விட பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றால் தான் பரீட்சைகளில் சித்தி எய்த முடிகின்றது. இக்கருத்து நிரூபிக்கப்பட்டும் உள்ளது என்பது உண்மை. பார்க்கப்போனால் பல பிரத்தியேக வகுப்புகளில் அதே பாடசாலை ஆசிரியர்கள் தான் கற்பிக்கின்றார்கள், ஏன் இவர்களால் இதை பாடசாலையில் மட்டும் செய்ய முடியவில்லை????

இக்காலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மிகவும் குறைவான தொகையே இருக்கின்றனர் என்பதும் உண்மை. இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள், அது போல் கனிஷ்ட வகுப்புகளில் இருக்கும் மாணவர்களுக்கு மிக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு அவசியம், ஆனால் இப்பொழுதோ சாதாரண தரம் கூட சித்தி எய்தாதவர்களே கனிஷ்ட வகுப்புகளுக்கு பெரும் பாலும் பாடம் சொல்லிக்கொடுக்கின்றர்கள் என்பது வருத்ததிற்குரிய விடயமே.

முன்னைய காலங்களில் சாதாரண தரத்தில் சித்தி எய்தல் என்பது மிக கடினமான விடயமாகும். ஆனால் தற்பொழுது உள்ள கல்வி முறைமையின் படி அடிமட்டத்தில் உள்ள ஒரு மாணவன்/ மாணவி கூட சாதாரண தரத்தில் சித்தி எய்தலாம், அவ்வாறான இலகுவான ஒரு பரீட்சையில் கூட சித்தி எய்தாதவர்கள், தனியார் துறையில் சென்று ஏதோ ஒரு பாடத்திட்டத்தை கற்றுக்கொண்டு அவர்கள் காசுக்காக கொடுக்கும் ஒரு சான்றிதழை வாங்கிக்கொண்டு வந்து ஆசிரியர்கள் எனும் பெயரில் மாணவர்களை பிரத்தியேக வகுப்புகளுக்கு போவதற்கு தூண்டுகோலாக இருக்கின்றனர்.

இன்னும் காலம் செல்ல செல்ல என்னவெல்லாம் நடக்குமோ என்று என்னும் போது சற்று பயமாகத்தான் உள்ளது, நமது குழந்தைகளின் தலைமுறையிலாவது இந்த நிலைமை மாறட்டும்..

தற்காலத்தில் ஆசிரியர்கள் என்பது, நாம் இன்று படிப்பதை நேற்றே படித்து தெரிந்து கொண்டவர் என்று எங்கோ படித்த ஞாபகம். அது உண்மை தான் போலும்.. :)

இந்த பதிவில் நான் யாரையும் சாடவோ குறை கூறவோ இல்லை, ஆனால் தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம். இருந்தாலும் கற்பித்தலை சேவையாக மதித்து செயல்படுபவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் (௦.1 % மட்டும்).

கருத்துகள்

  1. கல்வி என்பது வியபாரம் ஆகிவிட்ட நிலைமையில் ஆசிரியரை கையெடுத்து கும்பிடும் சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம்.... பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. M.R கூறியது...
    தங்கள் கருத்து உண்மைதான் ச்கோ

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஒரு பதிவு வாழ்த்துக்கள்

    நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ் 10,போன்ற திரட்டிகளில் இணைக்கக்கூடாது?இவைகளில் இணைப்பதன் மூலம் பலரை உங்கள் பதிவுகள் சென்று அடையும்

    பதிலளிநீக்கு
  5. ஏணிகளை மறக்காத உங்கள் பண்புக்கு பெரிய வாழ்த்து ஒன்று..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை

    பதிலளிநீக்கு
  6. அட நீங்களும் நம்ம நாடா... வாழ்த்துக்கள் கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  7. கடந்த 20 வருடங்களாக கண்ணி துறை மேலும் பல துறைகளில் முன்னேற்றங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. ஒரு ஆரம்ப நிலை ஆசிரியர் ஒரே நேரத்தில் கண்ணி பாடத்திலும் சமூக அறிவியல் பாடத்திலும் master ஆக இருக்க முடியது. நம்மாலும் ஒரே நேரத்தில் ஒரு துறையில் தான் பலசாலியாக இருக்க முடியும்

    ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர் அனைத்து பாடங்களிலும் ஓரளவிற்க்கு தெரிந்து இருந்தாலே போதும்.

    இன்றைய பிள்ளைகள் கண்ணி வகுப்பு ஆபாக்கஸ் அப்புறம் எல்லாத்துக்கு போக காரணம் தன் பிள்ளை டாப்பாக வர வேண்டும் என்ற பெற்றோர்களின் பேராசையெ காரணம்.

    பதிலளிநீக்கு
  8. பள்ளி ஆசிரியர்கள் தங்களின் அறிவை வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் அவர்களை விடுமுறை நாட்களில் கூட தேர்வு தாள்களை திருத்த வேண்டும் மற்ற அலுவலகளை செய்யவே நேரம் போய் விடுகிறது. தானாகவே தனது அறிவை வளர்த்து கொள்ளுவோம் என்பதும் கடினம் தான்..

    பதிலளிநீக்கு
  9. கூடவே பிள்ளைகள் இவ்வாறு பள்ளி நேரம் தவிற வேறு படிப்புகளை கற்று கொள்வதால் அவர்கள் செக்குமாடு போல ஆகி விடுகிறார்கள். இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளான ஐஐடி ( indian institute of technology) படிப்புகாக பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சிறுவயதில் இருந்தே தயார் படுத்துகிறார்கள். இதனால் ஐஐடியில் சேர்ந்த பின்னர் அவர்கள் களைபடைந்து பாடங்களில் சரியாக கவனம் எடுப்பதில்லை என்றும் சொல்கிறார்கள்.

    என்னை பொருத்தவரை தேவை ஏற்பட்டால் யாரும் எதனையும் அறிந்து கொள்வார்கள். பிள்ளைகளை இவ்வாறு தனியாக பாடங்களை படிக்க அனுப்பி அவர்களை களைப்படைய செய்ய வேண்டாம் என்பதே

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா சொன்னது…
    100% rite

    Yeah, thank you for the opinion.

    பதிலளிநீக்கு
  11. மாய உலகம் சொன்னது…
    கல்வி என்பது வியபாரம் ஆகிவிட்ட நிலைமையில் ஆசிரியரை கையெடுத்து கும்பிடும் சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம்.... பகிர்வுக்கு நன்றி/////

    ஆம் நீங்கள் கூறியது சரியான கருத்து, கல்வி என்பது இக்காலத்தில் வியாபாரம் தான் ஆகி விட்டது. எனினும் அந்த வியாபாரத்தில் ஆசிரியர்களும் கலந்து விட்டது வருத்ததிற்குரிய விடயமே.

    பதிலளிநீக்கு
  12. M.R கூறியது...
    தங்கள் கருத்து உண்மைதான் ச்கோ/////////

    மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  13. K.s.s.Rajh சொன்னது…
    நல்ல ஒரு பதிவு வாழ்த்துக்கள்

    நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ் 10,போன்ற திரட்டிகளில் இணைக்கக்கூடாது?இவைகளில் இணைப்பதன் மூலம் பலரை உங்கள் பதிவுகள் சென்று அடையும்//////

    கருத்துக்கு மிக்க நன்றி, நான் இன்னும் கடை நிலையில் இருக்கின்றேன் எதிர்காலத்தில் முயற்சிப்போம். தமிழ்மணம், இண்ட்லி, தமிழ் 10 போன்ற திரட்டிகளில் இணைக்கும் அளவுக்கு என் பதிவுகள் தரமானதா என்பது இன்னும் எனக்கு புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  14. ♔ம.தி.சுதா♔ சொன்னது…
    ஏணிகளை மறக்காத உங்கள் பண்புக்கு பெரிய வாழ்த்து ஒன்று..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா//////

    மிக்க நன்றி சகோதரரே...

    பதிலளிநீக்கு
  15. ♔ம.தி.சுதா♔ சொன்னது…
    அட நீங்களும் நம்ம நாடா... வாழ்த்துக்கள் கலக்குங்க..///

    ஹி ஹி ஹி அதே அதே.. நானும் இந்த அழகிய நாட்டை சேர்ந்தவள் தான், மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  16. Arun Kumar சொன்னது…
    கடந்த 20 வருடங்களாக கண்ணி துறை மேலும் பல துறைகளில் முன்னேற்றங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. ஒரு ஆரம்ப நிலை ஆசிரியர் ஒரே நேரத்தில் கண்ணி பாடத்திலும் சமூக அறிவியல் பாடத்திலும் master ஆக இருக்க முடியது. நம்மாலும் ஒரே நேரத்தில் ஒரு துறையில் தான் பலசாலியாக இருக்க முடியும்

    ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர் அனைத்து பாடங்களிலும் ஓரளவிற்க்கு தெரிந்து இருந்தாலே போதும்.

    இன்றைய பிள்ளைகள் கண்ணி வகுப்பு ஆபாக்கஸ் அப்புறம் எல்லாத்துக்கு போக காரணம் தன் பிள்ளை டாப்பாக வர வேண்டும் என்ற பெற்றோர்களின் பேராசையெ காரணம்./////////

    ஆம் உங்கள் கருது முற்றும் முழுதும் உண்மையானது, இன்றைய கால கட்டத்தில் கல்வியில் இருக்கும் போட்டி நிலையே அதற்கு காரணம். எல்லா விடயங்களிலும் தம் பிள்ளை டாப்பாக வர வேண்டும் என்பது பெற்றோர்களின் பேராசை மட்டுமே.

    பதிலளிநீக்கு
  17. Arun Kumar சொன்னது…
    பள்ளி ஆசிரியர்கள் தங்களின் அறிவை வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் அவர்களை விடுமுறை நாட்களில் கூட தேர்வு தாள்களை திருத்த வேண்டும் மற்ற அலுவலகளை செய்யவே நேரம் போய் விடுகிறது. தானாகவே தனது அறிவை வளர்த்து கொள்ளுவோம் என்பதும் கடினம் தான்..///

    உங்கள் கருத்து மெய்யானது, இருந்தும் எதற்கும் நேரம் ஒதுக்கி கொள்வது எங்கள் கையில் தான் உள்ளது.. :)

    பதிலளிநீக்கு
  18. Arun Kumar சொன்னது…
    கூடவே பிள்ளைகள் இவ்வாறு பள்ளி நேரம் தவிற வேறு படிப்புகளை கற்று கொள்வதால் அவர்கள் செக்குமாடு போல ஆகி விடுகிறார்கள். இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளான ஐஐடி ( indian institute of technology) படிப்புகாக பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சிறுவயதில் இருந்தே தயார் படுத்துகிறார்கள். இதனால் ஐஐடியில் சேர்ந்த பின்னர் அவர்கள் களைபடைந்து பாடங்களில் சரியாக கவனம் எடுப்பதில்லை என்றும் சொல்கிறார்கள்.

    என்னை பொருத்தவரை தேவை ஏற்பட்டால் யாரும் எதனையும் அறிந்து கொள்வார்கள். பிள்ளைகளை இவ்வாறு தனியாக பாடங்களை படிக்க அனுப்பி அவர்களை களைப்படைய செய்ய வேண்டாம் என்பதே///////

    ஆம் நான் கூற வருவதும் அதே கருத்தை தான், ஏனெனில் எந்த ஒரு விடயத்தையும் நாங்களாக விரும்பி மனதார செய்யும் பொழுது தான் அந்த விடயத்தில் வெற்றி காண முடியும், இவ்வாறு பிள்ளைகளை ஒரு டைம் டேபிள் இற்கு வளர்ப்பதன் மூலம், அவர்களுக்கு அதை தவிர வேறு உலகம் இல்லை என்பது போல் ஆகி விடுகின்றது. காரணம் அவர்கள் 24 மணி நேரமும் அதையே செய்வதால். இவ்வாறு வளரும் மாணவர்களுக்கு பரீட்சை என்று ஒண்டு முடிந்தவுடன், அவர்கள் மூலையில் எந்த ஒரு அறிவும் இருக்காது, ஏனெனில் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே பரீட்சைக்கு படிதிருப்பர்களே (வாய் பாடமாக்கி இருப்பார்கள்) தவிர மூளைக்கு ஒரு விடயம் கூட ஏறி இருக்காது, எனவே புத்தகப்புளுவாக இருப்பார்களே தவிர பொது அறிவு இருக்காது.

    பதிலளிநீக்கு
  19. கல்வித் துறை கொஞ்சம் விரிவடைய வேண்டுமென்றால் ஆசிரியர்கள் என்ன தான் திறமையானவர்களாக இருந்தாலும், ”நாம் மட்டும் தான் கற்றுத் தர வேண்டும்” என்ற ஆனவத்தை விட்டால் போதும். குழு விவாதம் போல் எனக்குத் தெரியாததை வேறு யாரேனும் கூட சொல்லிக் கொடுக்கலாம் என்று மாணவர்களைத் தூண்டினால், கல்வி முறையில் மிகப் பெரிய மாற்றம் வரும்.
    மாணவனை புத்தகத்தை தாண்டி சிந்திக்க வைத்துவிட்டால் கல்வி மேன்மையடையும்.சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் சமூகவியல் ஆசிரியருக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது என்று. அவர் வகுப்பில் அதை ஆரோக்கியமாக விவாதித்து மாணவர்களுடனும் சேர்ந்து அவரும் கற்கலாம். ஆனால் இது சாத்தியமில்லை தான். ஆனால் அன்றைய குருகுல கல்வியில் நடந்தது. அதுவே விவேகானந்தரை உருவாக்கியது.
    ஒவ்வொரு பதிவும் பின்னூட்டத்திற்கு பதில் ஒரு கட்டுரையையே எழுத தூண்டுகிறது. இதுவே கல்வி.
    நாம் சொல்லிக் கொடுத்ததைத் தாண்டி மாணவன் சிந்திக்க வேண்டும். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  20. போலி டாக்டர்களை கைது செய்து தண்டிக்கும் சட்டம் போலி ஆசிரியர்களையும் தண்டிக்க வேண்டும்...
    (மாணவர்களுக்கு தேர்வுகள் வைப்பது மாதிரி ஆசிரியர்களுக்கு தகுதியை பரிசோதிக்கும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

உடைந்த கனவுகள் - உள்ளக்குமுறல்