தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

முகப்புத்தகத்தில் வந்தாய் - விண்ணப்பம் செய்தாய்.. மற்றோருக்கு முகம் திருப்பும் நான் - சத்தமின்றி உன் விண்ணப்பத்தை ஏற்றேன்.. அரட்டைக்கு வந்தாய், ஹாய் என்றாய் - யாருக்கும் பதில் அனுப்பாத நான் உனக்கு ஹலோ என்றேன்.. எடுத்த எடுப்பிலேயே டார்லிங் என்றாய் - வெறுப்பு வர வில்லை எனக்கு உன் மேல்.. வாடி போடி என யாருமே என்னை அழைக்காத வண்ணம் உரிமையுடன் அழைத்தாய் - வேண்டாம் என்று சொல்லத்தோனவில்லை எனக்கு.. உன்னை காதலிக்கிறேன் என்றாய் - வெட்கமின்றி சம்மதித்தேன்.. கண்ணழகு, குழலழகு, சிரிப்பழகு, செவி அழகு என்றாய் - பல்லை இளித்தேன் அட பல்வரிசை கூட என்னைப்போலவே என்றாய்.. சொல்ல வார்த்தை இல்லை - உறைந்து நின்றேன்.. அன்று தான் பெண்மை எய்தியது போல் உணர்ந்தேன் - வெட்கத்தில் உடம்பு கூசியது அது நம் முதல் சந்திப்பு... அருகில் வந்து "லட்டு" என்றாய் - அந்த வார்த்தையில் ஆதிகால பெண்ணாய் மாறினேன்... உன்னை பெயர் சொல்லி அழைக்கவும் என் நா கூசியது.. என் பெயரை சொல்லுடி என்றாய் - முடியாது என்றேன்.. அடியே கிறுக்கி என்றாய் - அது கூட பிடித்தது எனக்கு.. ஆசையாய் மாமா என்றேன் - அடி என் லட்டு என்றாய்.. நேரில் சந்திக்காமலே வளர...