இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்ல டா சாமி..

வை மீ லோர்ட்??? இந்த உலகத்துல தன்னோட வேலைய பார்க்காம அடுத்தவன் விஷயத்தில தலையிடும் புண்ணியவான்கள் நிறையவே இருக்காங்க. அது வெளியில மட்டுமில்லைங்க நம்ம வீட்ல கூட இருப்பாங்க. வெளில சொன்னாலும் சொல்லட்டியும் நம்ம எல்லாருக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் நிறையவே இருக்கும்.. அவங்க பாட்டுக்கு ஏதோ சொல்லி நம்மள குழப்பி விட்டுட்டு போயிருவாங்க ஆனா கடைசியா நம்ம தலை தான் டைம் போம் மாறி இப்போ வெடிக்குமோ அப்போ வேடிக்குமொனு ஆகிடும். என்ன கொடும சரவணன் இது.. இதோ சில நொந்து நூல் ஆகிய சந்தர்ப்பங்கள்.. நாம பாட்டுக்கு வீட்ட பூட்டிட்டு சிவனேன்னு வெளிய போய்கிட்டு இருப்போம், அப்ப வந்து கேப்பாங்க பாருங்க, புண்ணியவான் : ஒழுங்கா வீட்ட பூட்டினியா??????? நாம : !@#$%^&* ஒரு தூரப்பயணம் புறப்பட்டு போகும் போது நாம நமக்கு தேவையான எல்லாத்தையும் கரெக்டா எடுத்து வச்சி தான் இருப்போம், ஆனா நம்மள வழி அனுப்ப வாரவங்க இருக்கங்களே, அதை எடுத்தியா இதை எடுத்தியான்னு கேட்டே நம்மள கன்பியுஸ் பண்ணிருவாங்க. எப்படியாவது கஷ்டப்பட்டு நாம ஒரு நல்ல தொழில் தேடி கடவுளேன்னு அதுக்கு போய்கிட்டு இருப்போம், ஆனா நம்ம புன்னியவான்ஸ் இ...